> குருத்து: ஜூன் 6 – நரகத்துக்கு ரயிலேறிய நாள்!

June 5, 2009

ஜூன் 6 – நரகத்துக்கு ரயிலேறிய நாள்!


ஒரு வேண்டுகோள்! மீண்டும் ஒரு முறை திருத்தமாக தலைப்பை படித்துவிட்டு வாருங்கள். நகரத்துக்கு அல்ல! நரகத்திற்க்கு!.

என் பிறந்தநாள் கூட பல சமயங்களில் மறந்திருக்கிறேன். பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக நினைவு வரும் அல்லது இரண்டு நாள்கள் கழித்து நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஜூன் 6 மட்டும் சரியாக அந்த நாளே நினைவுக்கு வரும்.

தமிழ்நாட்டில் சிறுநகரங்களுக்கு வேலைக்காக போய், மீண்டும் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய மாதிரி... அப்படி நம்பித்தான் சென்னைக்கும் ரயிலேறினேன். ஒரு உள்ளூணர்வோ, வானில் அசரிரீயோ ஒரு மண்ணாங்கட்டியும் எச்சரிக்கவில்லை. “பெருநகரத்துக்கு போகும் பாதை! ஒரு வழிப்பாதை” என!

சென்னைக்கு என்னுடன் ரயிலேறியவர்கள் இன்னும் இருவர். ஒருவர் தமிழ் இலக்கியம் எம்.ஏ. படிக்க.... இன்னொருவர் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்ய... வந்தார்கள்.

இலக்கியம் படிக்க வந்தவர்... “இது சாத்தான் ஆள்கிற நகரம். இங்கு வாழ்கிறவர்கள் சாபத்தால் சூழப்பட்டவர்கள். ஓடிப்போய்விடு” என மனித வடிவில் ஒரு தேவதூதனால் எச்சரிக்கப்பட்டு, என்னிடம் கூட அந்த தேவ ரகசியத்தைச் சொல்லாமல் பின்னங்கால் தெறிக்க ஓடிப்போய்விட்டார். இப்பொழுது சொந்த ஊரில் நிம்மதியாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை புத்தக கண்காட்சியில் பார்த்தேன்.

மற்றொருவர்... ஒரு பத்திரிக்கையில் கொஞ்ச காலம் வேலை பார்த்து... செட்டாகாமல்.. ஏதோ “உள்ளூணர்வு” எச்சரித்து, அவரும் சொந்த ஊருக்கு பொட்டியை கட்டி போய்விட்டார்.

மாட்டிக்கொண்டவன் நான் மட்டும். நான் ஆசிர்வாதிக்கப்பட்டவன். அதனால் தான் இந்த
பெருநகர சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது என பெருமகிழ்ச்சி அடைந்தேன். சில ஆண்டு பெருநகர வாழ்க்கையில் தான் அறிந்தேன். நரகத்தை சொர்க்கம் எனவும், சபிக்கப்பட்டிருப்பது தெரியாமல், ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவும் புரிந்திருக்கிறேன்.

இந்த நரகத்திலிருந்து தப்பிக்க.. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நேற்று ஒரு நண்பன் வந்து... சொந்தவீட்டுகாரகள் வாடகை வீட்டுகாரர்களை படுத்தும்பாடு தாங்கமுடியவில்லை. இந்த தொல்லையிலிருந்து விடுபட... இருவரும் சேர்ந்து இங்கு ஒரு வீடு வாங்கலாமா? என்றான்.

நகரத்தில் வீடா? இவன் சாத்தானின் தூதுவனோ? அவனையே முறைத்துப் பார்த்தேன். வாடகை வீட்டில் இருந்தாலாவது... தப்பித்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையாவது இருக்கும். சொந்த வீடென்றால்... நினைப்பே பாதி ஆயுசை குறைக்கிறது.

இப்பொழுதெல்லாம்.. ஊரிலிருந்து யாரும் சென்னைக்கு பேருந்தோ, ரயிலோ ஏற முனைந்தால்... வராதே! என உறுதியாய் எச்சரித்துவிடுகிறேன். ஏதோ என்னால் முடிந்தது.

7 பின்னூட்டங்கள்:

SUNDAR said...

என்ன அன்பரே இப்படி சொல்லிவிட்டீர்கள்?
சென்னை சபிக்கப்பட்ட நகரமா? என்னை பொறுத்தவரை அப்படி சொல்ல முடியாது! காரணம் மும்பை பட்டணத்தில் வாழ்ந்து பார்த்தவர்களுக்கு சென்னையின் அருமை தெரியும்!

மும்பையோடு கம்பேர் பண்ணும்போது சென்னை நல்ல நகரமே!

பெருநகரத்தில் வழவேண்டும் என்ற விருப்பத்தில் எத்தனைபேர் சென்னை வருகிறார்களோ தெரியாது ஆனால் வாழ வேறு வழியின்றி கிராமத்தைவிட்டு பிரிந்து சென்னையில் வசிப்பவர்கள்தான் அதிகம் என்று நான் கருதுகிறேன்.

மேலும் ஒரு முக்கிய கருத்து.

ஒருவர் எந்த சாபம் நிறைந்த நகரத்துக்குள் இருந்தாலும் அழிவின்போது இறைவன் காப்பாற்ற நினைத்தால் ஒருவரை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில்தான் இங்கு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்!

குருத்து said...

//மும்பையோடு கம்பேர் பண்ணும்போது சென்னை நல்ல நகரமே! //

எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியை சொல்கிறீர்கள்.

//வேறு வழியின்றி கிராமத்தைவிட்டு பிரிந்து சென்னையில் வசிப்பவர்கள்தான் அதிகம் என்று நான் கருதுகிறேன்.//

இந்தியாவின் ஆத்மா கிராமங்கள் என்றார் காந்தி. கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதால் தான், நகரங்கள் உப்புகின்றன.

நகரமயமாக்கம் என்பது, உடலில் ஏற்படும் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல! அது கட்டி. அது அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்யவேண்டும்.

//நம்பிக்கையில்தான் இங்கு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்!//

நீங்களும் சிரமப்பட்டு தான் நகரத்தில் வாழ்க்கையை கடத்தி கொண்டிருப்பீர்கள் என தெரிகிறது.

Anonymous said...

தலைவா.. கவலையே படாதீங்க... இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க.. நம்ம தென் மாவட்டங்கள்ல பூராவும் தொழிற்சாலை தொடங்கி முன்னேத்தப் போறாங்க. நம்ம அஞ்சா நெஞ்சன் வந்துட்டாருல்ல.. அப்பால யாரும் சென்னையை தேடி ஓடி வர வேண்டியதில்லை.. கரீக்டா.. அதான் தினமணியிலயே தலையங்கம் எழுதிட்டாய்ங்களே...

பால்வெளி said...

நல்ல சுவாரசியமான நடை...keep it up.. ஆனால் சென்னையை ஏன் நரகமாக உணர்ந்தீர்கள் என்று சில வரிகள் விளக்கியிருக்கலாம். எனக்கு தெரிந்தவரை, வாய்ப்பு கிடைத்தால் வெளியூரில் இருந்து வந்த அனைவருமே சென்னையை விட்டு ஓடிப் போவதற்கே தயாராக இருப்பார்கள் என்று நினக்கிறேன். இங்குள்ள வாழ்க்கை முறையில் வரும் அலுப்பு மட்டுமல்ல. பொதுவாகவே சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக ஓடி வருவதென்பதே சோகம் தான். சராசரி மனிதனுக்கு தன்னம்பிக்கையை குறைக்கும், தைரியத்தை குறைக்கும்.. தெருவில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பதில் கூட சற்று யோசிக்க வைக்கும்.. சொந்த ஊரென்றால் அப்படியா?.. அதையும் மீறி நம் இயல்பு மாறாமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது..

போராட்டம் said...

இந்த எழுத்து நடையும், நையாண்டியும் வேறு தலைப்புகளுக்கும் தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

ellaarum sontha uurla chummaa utkaarnthukittu iruppatha vida uzhaichchu munneeRa entha uurukkum poogalaam. sontha uurai munneeRRa paakkanum illa.. nallathai, enga irunthum pannunga.. unga uuragidum entha uurum.. kundu chattila kuthira otta mudiathu marutha kaararE. ennoda uuru illannu ellarum sontha uurukE eengikittu iruntha chennai naragam thaan veetta thavira ellaam naragam thaan

Anonymous said...

Nidhamum kidaikkum kadal katru.
Mudiyum pothellam sellakkoodiya mamallapuram.
Kaalaara nadakka ondralla moondru kadarkkaraigal.

Patri eriyum veyilai thavira, sennai endrume ezhil kundra nagarame.

Oru murai, "Shopping mall"galaithhavira ethumillamal, Inge veyile illai endru koorithirigira engaloor-bengaloor makkalai-maakkalai vandhu paarungal