இந்திய உணவு கழகம் விவசாயிகளிடமிருந்து அரிசி, நெல், மக்காசோளம் என பல விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. ஆனால் அதை முறையாக பாதுகாப்பதற்கு குடவுன்கள் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காயவிட்டு விடுகிறார்கள். இதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு ரூ. 50000 கோடிக்கும் மேலே! அளவில் மதிப்பிட வேண்டுமென்றால், கொள்முதல் செய்யும் பொருட்களில் 20% வீணாய் போகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் சட்டம் மூலம் உணவு இந்திய உணவு கழகம் சொன்ன பதில் என்ன?
1997 முதல் 2007 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் வீணாகிப்போன பொருட்களின் மதிப்பு - 10 லட்சம் டன். அதை அப்புறப்ப்டுத்த சில கோடிகள் செலவானது.
10 லட்சம் டன் உணவை கொண்டு, 1 கோடி இந்தியருக்கு 1 வருடத்திற்கு வயிறார சாப்பாடு போடலாம் என்கிறார்கள்.
இப்படி வீணாய் போவதைப் பற்றி நடந்த வழக்கில், சமீபத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, சில கேள்விகளுக்கு அரசிடம் பதிலளிக்க சொல்லியிருக்கிறார்கள்.
"மக்கள் பசியால் வாடும் பொழுது, ஒரு கோதுமையை வீணடித்தால் கூட குற்றம் தான். பாதுகாப்பதற்கு குடவுன் இல்லையென்றால், குறைந்தபட்சம் தார்ப்பாலின் போட்டு மூட வேண்டியது தானே! உங்களால் பாதுகாக்க முடியவில்லை யென்றால், பசியால் வாடும் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்"
அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எத்தனை கேள்விகள் கேட்டாலும் உரைக்காது. நாமும் பல காலம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.
பசியால் வாடும் மக்கள் உணவு கிடங்குக்குள் உள்ளே புகுந்து, உணவை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு. அந்த நல்ல நாள் எந்த நாளோ?!
தொடர்புடைய சுட்டிகள் :
http://www.deccanherald.com/content/84222/food-grains-rot-fci-godowns.html
http://sikhsangat.org/2010/07/rs-800-cr-wheat-goes-waste-annually-why-not-let-farmers-exports-their-crops-in-a-democratic-way/
வயிற்றில் அடிக்கிறார்களே! - தினமணி தலையங்கம்
3 பின்னூட்டங்கள்:
சோதனை
ஆம், பசியால் வாடும் மக்கள் உணவு கிடங்குக்குள் உள்ளே புகுந்து, உணவை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு.
ஒரு என்பதை ஒரே என மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் தோழர்.
செங்கொடி
தோழர் செங்கொடி,
ஒரே தீர்வு என எழுதியிருந்தேன். பதியும் பொழுது, ஒரு தீர்வு என பதிவிட்டுவிட்டேன். இப்பொழுது மாற்றிவிட்டேன் தோழர். சுட்டி காட்டியமைக்கு நன்றி.
Post a Comment