> குருத்து: தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்!

May 12, 2011

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்!


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்குலோயா என்ற ஊரில் ஆதிவாசிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அங்கு மான்யம் காடுகள் என்ற பகுதி உள்ளது.

அங்கு 'பாக்சைட் கனிமம்', பீங்கான் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் 'சைனோ கிளே' என்ற விலை உயர்ந்த களிமண் நிறைந்து உள்ளன. மக்கள் பாக்சைட் கனிமம் வெட்டி வெடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 15,613 ஹெக்டர் நிலத்தில் உள்ள 60 லட்சம் டன் சைனா கிளே கனிமத்தை, வருடத்துக்கு 15 ஆயிரம் டன் களிமண் வீதம் வெட்டி எடுக்க அரசு குத்தகைக்குவிட்டது. அந்த தொகுதியின் தெலுங்கு தேச எம்.எல்.ஏ விவேரி சோமா தனது பினாமி ஆட்கள் பெயரில் இதை குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று அங்கு முதன் முதலாக சைனா கிளே களிமண்ணை வெட்டி எடுக்க ஆட்கள் சென்றனர். இதை அறிந்த ஆதிவாசிகள், துடைப்பம், முறம், கட்டைகள் போன்றவற்றுடன் அதிக அளவில் அங்கு திரண்டனர். களிமண்ணை வெட்டி எடுக்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதை அறிந்த எம்.எல்.ஏ. விவேரி சோமா, அந்த பகுதியின் மண்டல தலைவரோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சமாதானத்தை ஏற்காமல் அவர்கள் மீது சாணத்தை அள்ளி வீசினார்கள். எம்.எல்.ஏ-வும், மண்டல தலைவரும் தலை தெறிக்க ஓடி, காரில் ஏறி தப்ப முயன்றார்கள். காரையும் அடித்து நொறுக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என ஓடிவிட்டனர்.

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test