> குருத்து: மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

August 26, 2012

மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!

மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர்  கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

இதனை அறிந்த புமாஇமு தோழர்கள்  இன்று(26.8.12) பிற்பகல் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று பொய் வழக்கில்  கைது செய்த தோழர்களை விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சொல்லுமாறும்  கேட்டபோது போலீசார் எங்கள் தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டினர்.

மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

1 பின்னூட்டங்கள்:

kumizhi said...

- மறுக்கப்பட்ட நீதி -
பேருந்து வசதி கேட்ட மாணவர்களை சிறையில் அடைத்த அரசாங்கம்.


காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமிழி ஊராட்சியில், ஒத்திவாக்கம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், அஸ்தினாபுரம் மற்றும் எடப்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் வசதிக்காக, தாம்பரம் பணிமனையில் இருந்து, தடம் எண் 60.கே என்ற அரசு பேருந்து குமிழி வரை இயக்கப்படுகிறது. இப்பேருந்து, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, காட்டூர், அருங்கால் மற்றும் கீரப்பாக்கம் வழியாக குமிழி செல்லும். இந்த பேருந்தினை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தினசரி ஆறு சர்வீஸ் இயக்கப்பட்டு வந்த இப்பேருந்து, சாலை பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக, இரண்டு சர்வீஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், குமிழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து, உயர்நிலை பள்ளிக்காக கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் செல்லும் நுõற்றுக்கணக்கான மாணவர்கள், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே, இப்பேருந்தினை வழக்கம் போல், தினசரி ஆறு சர்வீஸ் இயக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இரண்டு சர்வீஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நுõற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு, குமிழி சென்ற பேருந்தினை சிறை பிடித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் ஆனவம்:

நாளை முதல் பேருந்தினை சரிவர இயக்குவதாக கூறிவிட்டுச் சென்ற போக்குவத்து அதிகாரிகள், மறுநாள் அப்பகுதிக்கு, பேருந்து சேவையிவை முற்றிலுமாக நிறுத்தனர். இதனால், ஆத்தரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
ஆனாலும், நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவங்கப்படவில்லை. கடும் அவதிக்குள்ளாகிப் போன குமிழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று அப்பகுதியில் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மறுக்கப்பட்ட நீதி:

தகவலறிந்து, அங்கு வந்த திருப்போரூர் காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால், தங்களது கிராமத்திற்கு பேருந்தினை இயக்க அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் கூறினர். இதனை பெருங்குற்றமாக கருதிய காவல்துறையினர் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராதது, சாலை சரியில்லை என பேருந்து சேவையினை நிறுத்தியது, தங்களது கிராம குறைகளை சரிசெய்ய கூறியும் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருந்தது, என அனைத்து தவறுகளையும் அரசு அதிகாரிகள் செய்து விட்டு, உரிமைக்காக போராடிய மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.