> குருத்து: தொழிலாளர்களுக்கு பிஸ்கெட் கட்!

July 23, 2013

தொழிலாளர்களுக்கு பிஸ்கெட் கட்!

நேற்று மாலை 6 மணி அளவில் ஒரு நிறுவனத்தில் தேநீர் தந்தார்கள். வழக்கமாய் தேநீருடன் 3 பிஸ்கெட்டுகள் தருவார்கள். ஏன் தரவில்லை என்றதற்கு, நிறுவனத்தின் மாத விற்பனை தொடர் சரிவால், "பிஸ்கெட் கட்" என்றார்கள்.

வருட விற்பனை 12 கோடியாய் இருந்த பொழுது, ஆப்பிள் ஜூஸ் ஏதும் தொழிலாளர்களுக்கு தரவில்லை. வருட விற்பனை 3 கோடியான பொழுது, பிஸ்கட்டை கூட வெட்டுகிறார்கள்.

உலக முதலாளிகளோ உள்ளூர் முதலாளிகளோ எல்லோரும் ஒரே மாதிரியாக தான் சிந்திக்கிறார்கள்.

# என்னுடைய தளத்தையோ/முகநூலையோ எனக்கு தெரிந்த‌ முதலாளிகள் யாரும் பார்ப்பதில்லை. பார்த்துவிட்டால், தேநீர் என்ன, நிறுவனத்திற்கு உள்ளேயே விடமாட்டார்கள். :)

1 பின்னூட்டங்கள்:

தமிழானவன் said...

உங்களையே விட மாட்டாங்க அப்பறமெதுக்கு பிஸ்கட்டெல்லாம், ருசியே இல்லாத காஃபிய காசு குடுத்து குடிக்கறம் நாங்கலாம்