> குருத்து: வாஸ்து கொல்லும்!

September 1, 2013

வாஸ்து கொல்லும்!

வாஸ்து கொல்லும்!

சென்னை செங்குன்றத்தில் அழகுநிலையம் துவங்க, அப்பாவும், பொண்ணும் பூஜை போட்டிருக்கிறார்கள். பூஜையில் கலந்துகொண்ட பகுதியில் அறிமுகமான  நண்பர், வாஸ்து பெயர் பலகை இப்படி இருக்க கூடாது என சொல்லியிருக்கிறார். அப்பா, பொண்ணு, வாஸ்து சொன்னவர், இன்னொருவர் என நால்வரும் அதை திருப்பியிருக்கிறார்கள்.

திருப்பும் பொழுது, 1100 வோல்டேஜ் போன மின்கம்பியில் தட்ட, நால்வரும் ஸ்பாட்டிலேயெ உயிரை விட்டிருக்கிறார்கள். வாஸ்துவின் நுணுக்கம் தெரிந்தவருக்கு மின்சாரத்தை தொட்டால் உயிர் போகும் என கவனமாய் வேலை செய்யாமல் போய்விட்டார். அதன் இயல்பில் அப்படியே கூட விட்டிருக்கலாம். இப்பொழுது வாஸ்து படி வைக்கிறேன் என நாலு பேர் மனித உயிர்கள் அநியாயமாக போய்விட்டது.

விசேசத்திற்கு வருகிறவர்கள் தங்களுடைய அறிவை காட்டுகிறேன் என எப்பொழுதும் இப்படி ஒருவர் இருவர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடை திறப்பில் விபரீதம் : மின்சாரம் பாய்ந்து நால்வர் பலி! - தினமணி


1 பின்னூட்டங்கள்:

காமக்கிழத்தன் said...

கொல்லும்...கொல்லும்...கொன்றுகொண்டே இருக்கும்.

நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்!