> குருத்து: காலையிலேயே பல்பு! :)

August 31, 2013

காலையிலேயே பல்பு! :)

பக்கத்து வீட்டிலிருந்து மின்சார போஸ்ட்டுக்கு செல்லும் மின்சார வயர் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி கொண்டே இருந்தது. பிறகு, கை எட்டும் தூரத்துக்கு வந்துகொண்டே இருந்தது. இந்த பக்கத்து வீட்டுக்காரர் என்ன இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார். மின்சாரம் விசயத்தில் இப்படி அலட்சியமாக இருக்கிறாரே என தோன்றியது. இன்று காலையில் வயர் ரெம்பவும் இறங்கி தலை தட்டும் அளவுக்கு இறங்கிவிட்டது.

அவரைக் கூப்பிட்டு, ”என்ன சார்! இவ்வளவு வயர் இறங்கிருச்சு! இ.பி. காரங்கள கூப்பிட்டு சரி செய்யலாம்ல!” என்றேன்.

”அது உங்க வீட்டு வயர் சார்! தொடக்கத்திலே நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்புறம் பக்கத்துல் போய் பார்த்தா, உங்க வயரா இருந்தது!” என்றார்.

காலையிலேயே பல்பு!

“எங்க வயர் தெரிஞ்சுவுடனே என்னிடம் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!” என வழிந்து வந்தேன்.

1 பின்னூட்டங்கள்:

ராஜி said...

பல்ப் நல்லாதா இருக்கு. யார் வீட்டு வயர்ன்னு தெரியாமயே ரெண்டு வீட்டுக்காரரும் இருந்திருக்கீங்க! சூப்பர்.