“நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாயகனுக்கு பின்தலையில் அடிப்பட்டு, ஆழ்மனதில் (!) இருந்த காதலி கூட மறந்து போய், (ஆனால் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது காதலித்த சாயீரா பானு நினைவில் நிற்பாள்) திருமண வரவேற்பில் தன் அருகில் நிற்கும் நாயகியை ப்பா! யார்டா இந்த பொண்ணு? பேய்மாதிரி இருக்கு!” என சொல்லும் பொழுது, நாயகி முதலில் வருத்தம் கொள்வாள். இரண்டாவதுமுறை, மூன்றாவது முறை சொல்லும் பொழுது, மெலிதாய் கண்கசிவாள். காதல் திருமணம். திருமணத்தில் உடன்பாடு இல்லாத அம்மாவும், அப்பாவும் பிரச்சனை செய்துவிடக்கூடாதே என்பதற்காக, பீறிட்டு வரும் அழுகையை கவனமாய் மறைத்துக்கொள்வாள்.
பல்வேறு களேபரங்களுடன் வரவேற்பு முடிந்து, அடுத்த நாள் திருமணமும் முடிந்து… மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவெல்லாம் தூங்கி எழுந்த பிறகு, மறந்த எல்லா நினைவுகளும் மீண்டும் வந்துவிடும். வரவேற்பு, திருமணம் முடிந்ததே அவனுக்கு நினைவுக்கு வராது. நிம்மதி பெருமூச்சுடன், நண்பர்கள் நடந்த அனைத்தையும் விளக்குவார்கள்.
பிறகு வீடு திரும்பும் வழியில், நண்பனின் அந்த சாதாரண செல்பேசியில் உள்ள புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வருவான். திருமண வரவேற்பில் நிற்கும் நாயகியைப் பார்த்து “இந்த போட்டோல தனம் ரெம்ப அழகா இருக்கில்லா!” என்பான் கண்களில் காதலுடன்!. புன்னகைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிச்செல்வான் நண்பன்.
எனக்கு நினைவுக்கு வந்தது இந்த வார்த்தைகள் தான்!
"லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்”
0 பின்னூட்டங்கள்:
Post a Comment