> குருத்து: தட்கல் பயணச்சீட்டு

March 17, 2020

தட்கல் பயணச்சீட்டு



ஒவ்வொருமுறை பதிவு செய்ய துவங்கும் பொழுதும், தேர்வு எழுத செல்லும் மாணவனின் மனப்பதட்டம் வந்துவிடுகிறது!

மனப்பதட்டம் வந்தாலும், அதை செயலில் காட்டிவிடாத ஒரு ஜென் ஞானியின் பக்குவம் தேவைப்படுகிறது!

நான் ஆவரேஜ் மாணவன் தான். 50%. தட்கல்லிலும் எனக்கு வெற்றி பெறும் வாய்ப்பும் அவ்வளவு தான். இரண்டு முயற்சிகளுக்கு ஒரு வெற்றி! கடைசி வரைக்கும் ஆவரேஜ் தானா?

பதிவு தளம் ஒரு தவறு செய்தால் ஒரு கறாரான ஆசிரியரைப் போல உடனே தண்டித்துவிடுகிறது!

ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு படிப்பினையை கற்றுத் தந்துவிடுகிறது!

உங்களுக்கு மட்டும் எப்படி சார் தட்கல் கிடைக்கிறது? என யாராவது சொல்லும் பொழுது, மண்டையில் இரண்டு கொம்பு முளைத்துவிடுகிறது! அதற்காக படும்பாடு நமக்கு மட்டும் தான் தெரியும்! 
தட்கல் முன்பதிவை வைத்து, ‘அதிர்ஷ்டத்தின்’ மேல் நம்பிக்கையே வந்துவிடும் போலிருக்கிறது!

ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் அவ்வப்பொழுது வரும் ஊழல் செய்திகள் ரத்தத்தை கொதிப்படைய செய்கிறது.

ரயிலை வேகவேகமாக தனியாருக்கு தாரைவார்க்க ஏற்பாடு செய்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு ரயில் பயணம் குறைந்த செலவில் வாய்க்குமோ!

தட்கலில் வரும் பதட்டத்தை ரயில் பயணம் மனதை லேசாக்கிவிடுகிறது!

0 பின்னூட்டங்கள்: