> குருத்து: ஒரு வரி ஆலோசகர் வாட்சப் புளு டிக்கை (Blue Tick) மறைக்கலாமா?

November 16, 2025

ஒரு வரி ஆலோசகர் வாட்சப் புளு டிக்கை (Blue Tick) மறைக்கலாமா?


வாட்சப்பில் ஒரு மெசேஜ் பெறுபவர் படித்துவிட்டார் என்பதைச் சொல்வதற்கான ஒரு காட்சி அறிகுறி தான் blue tick.

 

  • ஒரு டிக்மெசேஜ் அனுப்பிவிட்டோம்
  • இரண்டு டிக்சம்பந்தபட்டவருக்கு மெசேஜ் போய் சேர்ந்துவிட்டது.
  • இரண்டு நீல டிக் அந்த செய்தி பார்க்க/படிக்கப்பட்டுவிட்டது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு உறுப்பினர் தனது நண்பர் நம்முடைய சொசைட்டியில் உறுப்பினாராக விரும்புகிறார். அவரிடம் பேசுங்கள் என தெரிவித்தார். அவரை அழைத்து பேசிய பொழுது, சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்து பேசிய பொழுது ஆர்வமாக கேட்டுக்கொண்டார்.

 

விண்ணப்பம், சந்தா குறித்த விவரங்களை அனுப்பினேன்.  அரை மணி நேரம் ஆகியும் அவர் பார்த்ததிற்கான புளு டிக் வரவில்லை. போன் செய்து தெரிவித்த பொழுது, அந்த செய்தியை பார்த்துவிட்டதாகவும், விரைவில் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

இன்னொரு புதிய உறுப்பினருக்கும் சமீபத்தில் இதே போல வந்தது. அவரிடமே  கேட்ட பொழுது, ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் தொல்லை செய்கிறார்கள் என்பதற்காக, இப்படி மறைத்து வைத்திருக்கிறேன் என்றார்.

 

தொல்லை செய்கிறவர்களுக்கு மட்டும் புளு டிக்கை ஆப் செய்ய தெரியாமல், எல்லோருக்கும் புளு டிக்கை மறைப்பது என்பது கொசுவுக்காக வீட்டை தீயிட்டு எரிச்ச மாதிரிஎன்பது போல ஆகிவிடாதா?  தொல்லை செய்யாத பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதனால் அதிருப்தி ஆக மாட்டார்களா?

 

"தகவல் பரிமாற்றத்தில் மறைவு அதிகரித்தால், நம்பிக்கை குறைவதே இயல்பு."

 

இது கூட புரிந்துகொள்ளலாம். அவரும் அவருடைய வாடிக்கையாளர்களும் என்பது போல ஒரு சின்ன வட்டத்தில் முடிந்துவிடும்.

 

ஒரு டிரஸ்டில் வேலை செய்து வரும் ஒருவர் பொறுப்பான பதவிகளில் இருக்கும் ஒன்றிரண்டு நிர்வாகிகள் இப்படி புளு டிக்கை மறைத்து வைத்திருக்கிறார்கள் ஒவ்வொருமுறையும் போன் செய்து பார்த்தீர்களா என போன் செய்து கேட்க வேண்டியிருக்கிறது என வருத்தப்பட்டார்.

 

ஒரு பொது அமைப்பில்நிர்வாகிஎன்றால் உறுப்பினர்கள் அணுகுவதற்கும் (Reachable), பொறுப்பு ஏற்பதற்கும் (Responsive and Accountable) அவர் தயார் என்பதாக தான் உறுப்பினர்கள் எதிர்பார்ப்பார்கள். இல்லையென்றால் அவர் உறுப்பினராகவே தொடர்ந்துவிடுவார் அல்லவா!

 

அவருடைய போன். அவருடைய தனிப்பட்ட வாட்சப் எண். இதை செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என இதைப் பார்க்கலாமா? பார்க்கலாம் தான்.  ஆனால் ஒன்றை சொல்லமுடியும். இந்த நடவடிக்கை எப்பொழுதும் உறுப்பினர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத்தராது.

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

0 பின்னூட்டங்கள்: