> குருத்து: WhatsApp Broadcast – ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?

November 26, 2025

WhatsApp Broadcast – ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?


WhatsApp-ல் “Broadcast” என்பது ஒரே செய்தியை பலருக்கு ஒரே நேரத்தில் தனித்தனியாக அனுப்பும் ஒரு வசதியாகும். இது WhatsApp குழுவைப் போலல்ல. குழுவில் எல்லோரும் ஒருவருக்கொருவர் செய்தியைப் பார்ப்பார்கள். ஆனால் Broadcast-ல் பெறுபவர்கள் ஒருவரையும் அறியமாட்டார்கள்; அது அவர்களுக்கு தனிப்பட்ட WhatsApp message போலத் தோன்றும்.

 

உதாரணமாக :  நாம் அறிந்த ஒன்று.  ஒரு அமைப்பு தன் உறுப்பினர்களை எல்லோரையும் இணைத்து ஒரு Broadcast உருவாக்கி வைத்து தான் நினைவூட்டல்களை பதிவிடுகிரார்கள்.  எல்லோருக்கும் அதே நிமிடத்தில் போய் சேர்ந்துவிடுகிறது.

 

Broadcast எப்படி வேலை செய்கிறது?

 

  • ஒரே தகவலை பலருக்கு ஒரே நேரத்தில், தனிப்பட்ட முறையில் அனுப்ப முடியும்.
  • வாடிக்கையாளர்களுக்கு Updates, Reminders, Due dates, Alerts ஆகியவற்றை விரைவாக பகிர முடியும்.
  • வேலையில்  நெருக்கடியாக இருக்கும் பொழுதுகளில் ஒவ்வொருவருக்கும் தனித்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் நேரம் சேமிக்க உதவும்.

 

Broadcastயைப் எப்படி உருவாக்குவது?

 

Android / iPhone இரண்டிலும் அமைப்பு எளிது:

 

  1. WhatsApp- திறக்கவும்
  2. மேலே உள்ள Menu (அல்லது) Chats பகுதியில் செல்லவும்
  3. “New Broadcast” என்பதை தேர்ந்தெடுக்கவும்
  4. சேர்க்க வேண்டிய Contacts- தேர்வுசெய்யவும்
  5. “Create” அல்லது “Tick” அழுத்தவும்

 

இனி நீங்கள் Type செய்யும் செய்தி அந்த broadcast பட்டியலில் உள்ளவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும்.

 

Broadcast-ல் யார் யார் செய்தியைப் பெறுவார்கள்?

 

WhatsApp ஒரு முக்கிய நிபந்தனையை வைத்திருக்கிறது:

 

  • உங்கள் எண்ணை அவர்கள் தங்களது Phone Contacts-ல் சேமித்து (Save) இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் Broadcast message- பெறுவார்கள்.

 

இதை பலர் மறந்து விடுகிறார்கள். எனவே broadcast செயல்பட வாடிக்கையாளர்கள் உங்கள் எண்ணை சேமித்து வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

 

WhatsApp Broadcast – இலவச வரம்பு

 

WhatsApp-ல் ஒரு Broadcast List-ல் அதிகபட்சம்:  256 contacts வரை சேர்க்கலாம்.  இந்த வசதி முற்றிலும் இலவசம். நீங்கள் பல Broadcast (GST Clients, PF/ESI clients, General updates போன்ற பிரிவுகளாக பட்டியல்களை உருவாக்கலாம்.  *சமீபத்தில் ஒரு மாதத்திற்கு 35 மட்டுமே இலவசமாக அனுப்பமுடியும் என வரம்பை உருவாக்கியிருக்கிறது.*

 

ஒரு வரி ஆலோசகருக்கு இது எப்படி பயனளிக்கும்?

 

வரி ஆலோசகர்/தணிக்கையாளர் பணியில் செயல்திறன் மற்றும் நேரம் மிக முக்கியம். Broadcast, அதற்கு உதவும் சில முக்கிய வழிகள்:

 

1. Due Date Reminders  -  GST filing due dates, Income Tax compliance, TDS timelines போன்றவற்றை ஒரே நேரத்தில் அனைவருக்கும் அனுப்பலாம்.

 

2. முக்கிய அரசு circulars / notifications   - புதிய GST circular, PF/ESI notification போன்ற தகவல்களை விரைவாக பகிரலாம்.

 

3. Payment reminders – சேவைக் கட்டணத்தை நினைவூட்ட மொத்தமாக அனுப்பிக்கொள்ளலாம்.

 

4. Documents submission follow-up - “GSTR-3Bக்கு documents இன்று அனுப்பவும்போன்ற நினைவூட்டல்களை தனிபட்ட செய்தி போல அனுப்பலாம்.

 

5. Acceptable, non-spam communication -  ஒவ்வொருவருக்கும் தனியாக செல்லும் செய்தி என்பதால், வாடிக்கையாளர்கள் அதை நேரடியாக அனுப்புகிறார்கள் எனப் புரிந்துகொள்வார்கள். குழு செய்திகளைப் போல கவனிக்காமல் விடமாட்டார்கள்.

 

6. Time-saving - ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செய்தி அனுப்ப வேண்டிய நேரமும் முயற்சியும் குறையும்.

 

கடைசியாக...

 

WhatsApp பிராட்காஸ்ட் என்பது தனிப்பட்ட முறையில் பலருக்கு செய்தி அனுப்ப ஒரு சிறந்த கருவி. குரூப்பின் குழப்பம் இல்லை, ஆனால் Reach (அடையும் தன்மை) நன்றாக இருக்கும். இதைச் சரியாகப் பயன்படுத்தினால்  வணிகம் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

0 பின்னூட்டங்கள்: