வாட்ஸ்ஆப்பிலும் முகநூலிலும் பெரும்பாலும் தனக்கு வரக்கூடிய செய்திகளைத்தான் மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
சொந்தமாக யோசித்து எழுதுவதில் வேறு வேறு பிரச்சனைகள் இருந்தாலும் புதிதாக எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு தடையாக இருப்பது தமிழ் தட்டச்சு தான்.
ஏற்கனவே கூகுளில் தமிழ் பேச தட்டச்சு செய்கிற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். அதில் நிறைய குறைபாடுகள் இருந்தன. ஆகையால் அதை நான் பயன்படுத்தவில்லை நேற்று நண்பர் Speech_Notes என்றொரு ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
சரியாக தமிழை உச்சரித்து விட்டோம் என்றால் தப்பில்லாமல் தட்டச்சு செய்கிறது. இந்த பதிவிற்கு கூட இந்த செயலியைத் தான் பயன்படுத்தினேன். ஆச்சர்யம் என்னவென்றால்,
நான் தமிழுக்காக பயன்படுத்துகிற Latha font தான் இந்த செயலியும் பயன்படுத்துகிறது.
யாம் பெற்ற இந்த பலன் இந்த வையகமும் பலன் பெறட்டும்!
பின்குறிப்பு :
இந்த செயலி பல மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment