நாயகி மருத்துவமனையில் இருக்கிறாள். அவள் கர்ப்பமாய் இருக்கிறாள் என செய்தி சொல்கிறார்கள். ஆனால் அவளிடம் மகிழ்ச்சி இல்லை. அவள் நாயகனுக்கு போன் செய்துகொண்டே இருக்கிறாள். அவன் எடுக்காமல் இருக்கிறான்.
நாயகி வீட்டிற்கு வருகிறாள். நாயகியின் கணவன் பகலிலியே வீட்டில் தண்ணியடித்துக்கொண்டு இருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது.கைகலப்பு ஆகிறது. அவன் அவளை கோபத்தில் அடிக்கிறான். அப்படியே மடங்கி விழுகிறாள். அவளிடம் எந்த அசைவுமில்லை. காலிங்பெல் அழைக்கும் சத்தம் விடாமல் கேட்கிறது. பாத்ரூமில் அவளை நகர்த்திக்கொண்டு தற்போதைக்கு மறைத்து வைக்கிறான்.
ஒரு நண்பன் வருகிறான். தன் வீட்டு நிலைமை, தொழில் நிலைமை, பொண்டாட்டியைப் பற்றி புலம்புகிறான். அங்கிருக்கும் சரக்கை அடித்துக்கொண்டே இருக்கிறான். இன்னொரு நண்பன் தன் காதலியோடு வருகிறான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்புகிறோம் என்கிறான். எப்ப கிளம்புங்கடா! என சொன்னால் கூட நகர மறுக்கிறார்கள்.
இப்பொழுது மீண்டும் காலிங்பெல் அழைக்கிறது. திறக்கிறான். அங்கு நாயகி நிற்கிறாள். பிறகு என்ன நடந்தது என்பதை சொல்கிறார்கள்.
****
நம்மூரில் செல்லம் கொஞ்சினாலும், கணவன் மனைவி அதிகமாய் கொஞ்சுவார்கள். அடித்துக்கொண்டாலும் கடுமையாக அடித்துக்கொள்வார்கள். அப்படி ஒரு தம்பதியைப் பற்றிய கதை. படத்தின் பெயர் Love. American Beauty என ஒரு படம். இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொண்டு, அமெரிக்க குடும்பங்கள் எவ்வளவு சிதையுண்டு போயிருக்கின்றன என்பதை
அருமையாக
சொல்லியிருப்பார்கள்.கொரானா காலத்தில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று போல! பெரும்பாலான காட்சிகள் ஒரு அபார்ட்மெண்ட் வீட்டிற்குள்ளேயே முடித்துவிட்டார்கள். மொத்தப் படமும் 1.30 மணி நேரம் தான் இது! அடுத்தடுத்து என்ன? என்று போனாலும், போதவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
Shine tom Chacko, கர்ணன் படத்தில் வரும் நாயகி ரஜிஷா நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.
நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment