கணவன், மனைவி, பள்ளி செல்லும் மகள் என அமைதியாக வாழ்ந்துவருகிறது அந்த குடும்பம். அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலங்கோலப்படுத்திவிட்டு, அந்த ஆள் காணாமல் போய்விடுகிறான்.
August 31, 2023
Home for Rent (2023) தாய்லாந்து திகில் படம்
கணவன், மனைவி, பள்ளி செல்லும் மகள் என அமைதியாக வாழ்ந்துவருகிறது அந்த குடும்பம். அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அலங்கோலப்படுத்திவிட்டு, அந்த ஆள் காணாமல் போய்விடுகிறான்.
August 30, 2023
சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பு! பயப்படுறியா குமாரு!
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 200 குறைத்து அறிவித்திருக்கிறார்கள். ரூ. 400 இருந்த சிலிண்டர் விலையை கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ. 850 வரை மெல்ல மெல்ல ஏற்றி... ரூ. 1250க்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.
August 27, 2023
The Himalayas (2015)
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இமயமலையில் ஒரு சாகச பயணம்
August 22, 2023
மத்தகம் – வலைத்தொடர் ஒரு நல்ல திரில்லர்
“போலீசு கையிலும் துப்பாக்கி. நம்ம கையிலும் துப்பாக்கி. நாம் டிரிக்கரை அழுத்தினா போதும். சுட்டுவிடலாம். அவர்கள் சுடுவதற்கான ஆணை வரும் வரை காத்திருக்கவேண்டும்”
August 20, 2023
ஜெயிலர்
முன்னாள் ஜெயிலர். இப்பொழுது ஓய்வு பெற்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார். மகன் போலீசில் உயரதிகாரியாக இருக்கிறார். ஒரு பெரிய சிலை கடத்தல் மாபியா கும்பலை துரத்திக்கொண்டு இருக்கிறார். திடீரென ஒருநாள் காணாமல் போகிறார்.
அவரைத் தேடும்
முயற்சியில் ஜெயிலர் இறங்க… போன் செய்து ”மொத்த குடும்பத்தையும் காலி செய்கிறேன்” என வில்லன் மிரட்டுகிறான். தனது செல்வாக்கை பயன்படுத்தி, வில்லன் கும்பலை
எப்படி எதிர்கொண்டார் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
ஓய்வு பெற்ற
ஜெயிலர். அவருடைய செல்வாக்கு என இந்தப் படம் அடிப்படையே பலவீனமாக இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும்,
அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். இப்பொழுது விழுந்து விழுந்து மரியாதை செய்பவர்கள்
அதிகாரத்தை இறங்கிவிட்டால், ஒரு பயலும் தன்னை மதிக்கமாட்டார்கள் என மற்றவர்களை விட
அவர்களுக்கு நன்றாக உணர்ந்து இருப்பார்கள்.
அதனால் தான்
உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூட அதிகாரத்தை விட்டு இறங்கினால் மதிக்கமாட்டார்கள் என கவர்னருக்கு அடிபோடுகிறார்கள். ஆளும் கட்சிக்கு
ஆதரவாக வேலையில் இருக்கும் பொழுதே அதற்கான அடித்தள வேலைகளை கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.
இராயப்பேட்டை
மருத்துவமனையில் ம.க.இ.கவைச் சேர்ந்த ஒரு தோழர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க
தினமும் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து போய்க்கொண்டிருப்பார்கள். அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஓய்வு பெற்ற
மாவட்ட ஆட்சியர் ஒருவரை பார்க்க அபூர்வமாக ஆள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். இது தான் யதார்த்த நிலை.
படத்தில்
ஓவர் பில்டப். எதார்த்தம் தெரிவதால், எல்லாமே நமக்கு அபத்தமாக படுகிறது. அவர் சர்வ சாதாரணமாக கொலைகளை செய்கிறார். பெரிய
பெரிய வேலைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்கிறார். தாங்க முடியவில்லை.
ஒன்று அதிகாரத்தில்
இருப்பது போல காண்பித்திருக்கலாம். எல்லோரும் ஒத்துழைப்பார்கள் என புரிந்துகொள்ளலாம்.
இல்லையெனில், பெரிய பணக்காரராக காண்பித்து, தனது செல்வாக்கால் நகர்த்துகிறார் என்றாவது
சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பார்வையாளர்களால் புரிந்துகொள்ளமுடியும். ஒரு ரிட்டையர்டு ஜெயிலர் ஒரு சாதாரண வீட்டில் இருந்துகொண்டு இவ்வளவு ஆட்டம் போடுவதெல்லாம் தாங்க முடியவில்லை.
ஜெயிலருக்கான புரமோசன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. மொத்த இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் உ.பியின் முதல்வர் காலில் சாஷ்டாங்கமாக ரஜினி
விழுந்தார் என
செய்திகள் வருகின்றன.
இந்த பொழப்புக்கு நிம்மதியாக வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடலாம். அதிகாரம், புகழ், பண போதை யாரை விட்டது? ரஜினியை விடுவதற்கு!
August 19, 2023
Farzi – இந்தி வலைத்தொடர்
”ஒருவர் உயரத்தில் இருந்து விழும் போது முதலில் பறப்பது போல் தோன்றும்”
நெய்மர் – மலையாளம் – (2023)
கல்லூரி செல்லும் பையன் அவன். ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவளோடு பழக வாய்ப்பு தேடும் பொழுது “அவள் நாய் வளர்க்கிறாள். நீயும் நாய் வளர்த்தால், அவளோடு பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என நண்பன் யோசனை சொல்கிறான்.
August 17, 2023
நாயக பிம்பம்!
ஒரு நிறுவனத்துக்கு வேலை விசயமாக போயிருந்தேன். அங்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளி மெட்ரோ நிலையம் வரைக்கும் பைக்கில் கொண்டு வந்துவிட்டார்.
அவருடைய குடும்பம் குறித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, அவருடைய ஒன்றரை வயது பையனின் பெயர் என கேட்ட பொழுது.. "யாஷ் ரவி" என்றார்.
தமிழ் பெயர்கள் வைத்திருக்கலாமே? என்றேன்.
எனக்கு இறையன்புவை பிடிக்கும். அந்த பெயரை வைக்கலாம் என்றால், பழைய பெயராக இருக்கிறது என என் துணைவியார் ஒத்துக்கொள்ளவில்லை என்றார்.
யாஸ் ரவிக்கு என்ன அர்த்தம்? எனக் கேட்டேன்.
எங்க அப்பா பெயர் இரவிச்சந்திரன். 60களில் தமிழ் படங்களின் நாயகனுடைய பெயர்.
எனக்கு பெயர் வைத்தப்பொழுது... ஆந்திராவில் புகழ்பெற்ற "சிரஞ்சீவி" என நடிகரின் பெயர் வைத்தார்.
இப்பொழுது என் மகனுக்கு... கன்னடத்தில் கே.ஜி.எப் நாயகனான "யாஷ்" பெயரை வைத்தேன். அப்பா நினைவாக ரவியையும் சேர்த்துக்கொண்டேன்.
இப்பொழுது புரிந்தது "யாஷ் ரவி". விளையாட்டாக கேட்டேன். அடுத்த குழந்தைக்கு கேரள நாயகனின் பெயரா? என்றேன்.
இந்தக் குழந்தைக்கு எனக்கு பிடித்த பெயரை வைத்துவிட்டதால், அடுத்த குழந்தைக்கு என் மனைவியார் தான் முடிவு செய்வார் என்றார்.
August 16, 2023
”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!
”அப்ரோச்” அமைப்பின் சார்பில் நடைபெற்ற இலவச ஹோமியோ சேவை மையத்தின் ஆண்டு விழா அழைப்பிதழை பகிர்ந்திருந்தார்கள்.
August 12, 2023
இன்று நடைபெற்ற இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த விளக்க கூட்டம் குறித்து!
அன்புள்ள GSTPS உறுப்பினர்களுக்கு,
வணக்கம். தலைவர் அவ்வப்பொழுது ஒரு தலைப்பில் பேசுங்கள் என
சொல்லும் பொழுது, அது பெரிய வேலை. ”அதற்கெல்லாம்
நான் சரிப்பட்டு வரமாட்டோம்” என நம்பிக்கை ஆழமாய் இருந்தது.
ஆனால் நம் தலைவர் தான் விடுவதில்லையே! மீண்டும் வலியுறுத்துகிற பொழுது, பேசலாம் என முடிவுக்கு வந்தேன்.
அதை முதலில், இ.எஸ்.ஐ, பி.எப் லிருந்து துவங்குவோம் என சொன்ன பொழுது, தலைவரும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.
படிக்கத்
துவங்கிவிட்டேன். வில்லியப்பன் சாரிடம் அவ்வப்பொழுது
சந்தேகங்களை கலந்து பேசிக்கொண்டேன்.
பிபிடி குறித்த அறியாமையால், தட்டச்சு செய்து அதில் இடுவது தானே! என நானாக நினைத்துக்கொண்டேன். அந்த வேலையை செய்யும் பொழுது தான் அது எப்படிகவனத்துடனும், நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் புரிந்தது. நேற்றும், நேற்றைக்கு முதல் நாள் இரவும் பிபிடிக்காக நேரம் செலவிட வேண்டியிருந்தது.
முதல் உரை என்பதால், கொஞ்சம் உள்ளுக்குள் மெல்லிய பதட்டம் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பதட்டம் மேலெழும்பி வந்துவிடகூடாது என்பதில் எனக்கு நானே மறைத்துக்கொண்டேன்.
முதல் உரையிலேயே தமிழிலும் தயாரிப்பது என்பதற்காக கூடுதல் உழைப்பு தேவைப்பட்டது. ஆனால் நம் தாய் தமிழுக்காகவும், அப்பொழுது தான் தமிழ் பேசும் பல தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சென்று சேரும் என நினைத்தேன். அதனால் அதில் உறுதியாக இருந்தேன்.
எப்பொழுதும் போல கூட்டத்திற்கு 10.25க்குள் உள்ளே நுழைந்த பொழுது, 15 பேருக்கும் மேல் இருந்தவர்களைப் பார்த்ததும், கொஞ்சம் ”பயம்” தான் வந்தது.
என் உரை வரி ஆலோசகர்களுக்கு கிடையாது. பி.எப்பை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கானது
என்பதால், அவர்களை மனதில் வைத்து அவர்களுக்கு புரியும் விதத்தில் இருக்கவேண்டும் என
முடிவு செய்திருந்தேன். ஆகையால், செக்சன்களை, நிறைய புள்ளி விவரங்களை தவிர்க்கவேண்டும்
என முடிவு செய்திருந்தேன்.
ஒரு மணி நேரத்திற்குள்
பேசுவோமா, தாண்டிப் போகுமா என்ற பயம் இருந்தது.
அவ்வப்பொழுது நேரம் பார்த்து கொஞ்சம் வேகப்படுத்தி சமாளித்தேன். அநேகமாக
1.25 மணி நேரம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன்.
ஒரு தலைப்பில் படித்து, கலந்து பேசி, சந்தேகங்களை களைந்து, பிபிடி தயாரித்து பேசும் பொழுது தான் ஒரு உரை எத்தனை கடினம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. நிறைய தேடித்தேடி படித்ததால், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அதற்காக தான் தலைவர் இவ்வளவு வலியுறுத்துகிறார் என்கிற ரகசியத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது.
நமது உறுப்பினர்களில்
பெரும்பாலும் வரி ஆலோசகர்கள் தான். ஆகையால் நிறைய பேர் வரமாட்டார்கள் அல்லவா! என எனது
கருத்தாக தலைவரிடம் தெரிவித்தேன். 40 பேர் வரை நம் கூட்டத்திற்கு இயல்பாக வருகிறார்கள்.
அதே எண்ணிக்கையில் வருவார்கள் என தெரிவித்தார். ஆனால், 74 பேர் வரை கலந்துகொண்டார்கள். அதில் 28 பேர் நமது
உறுப்பினர்கள் என்கிற செய்தி தலைவர் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவிலும்,
தனிப்பட்ட முறையிலும் உரை குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.
1.25 மணி
நேரம் பேசி முடித்ததும், மொத்த ஆற்றலும் வடிந்தது போல இருந்தது. கேள்வி பதில் பகுதி
முழுக்க இரண்டு மூத்தவர்கள் Dr. வில்லியப்பன்
அவர்களும், கோவை பெருமாள் அவர்களும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சளைக்காமல் பதில்
தந்தது அருமையாக இருந்தது. அவர்களுக்கு நன்றி.
பேச உற்சாகம்
கொடுத்து பேச சொன்ன தலைவர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, வரவேற்புரை
பேசிய நமது இணைச்செயலர் செண்பகம் அவர்களும்,
நன்றியுரை வழங்கிய நமது பொருளாளர் செல்வராஜ் அவர்களுக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும்
நன்றி.
முதல் உரை என்பதால், அது தந்த அனுபவத்தை உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும், இனி வகுப்பு எடுக்கப் போகும் புதியவர்களுக்கும் நிச்சயம் பயன்படும் என்பதற்காக தான் இந்த பதிவை எழுதுகிறேன்.
ஆகையால், புதியவர்கள் உற்சாகத்துடன் வகுப்பு எடுக்க முன்வாருங்கள்.
நன்றி.
குறிப்பு : தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது, பிபிடி பகிருமாறு கேட்டார்கள். சில விடுபடுதல்கள், எழுத்துப்பிழைகள், திருத்தங்கள் செய்த பிறகு, குழுவில் பகிர்கிறேன்.