> குருத்து: யோகா – அனுபவக் குறிப்புகள்

March 15, 2009

யோகா – அனுபவக் குறிப்புகள்


கடந்த சில மாதங்களாக யோகாசனம் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதில் சொல்லிக்கொள்ளும்படி சில நல்ல பலன்கள் கிடைத்தன.

சமூக துன்ப துயரங்களை தான் பொதுவாக பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறோம். கொஞ்சம் மாற்றாக சில நல்ல பலன்களையும் பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்த பதிவு.

இனி, யோகா பற்றி அதன் வரலாறு, சமூகத்தில் உலவும் தப்பெண்ணங்கள், யோகா யாருக்கு?, யோகா மூலம் இந்து மதத்தை பரப்புகிறார்களா? வெளிநாடுகளில் யோகாவின் வளர்ச்சி என்பதை அகாடமிக் ஆய்வு அடிப்படையில் அல்லாமல், ஒரு அறிமுகமாய் அடுத்தடுத்து குட்டி குட்டி தலைப்புகளாக எழுதலாம் என்று இருக்கிறேன். நீங்களும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவில்.. யோகா-வால் கிடைத்த பலன்கள்

• பல சமயங்களில் மூளை கட்டளையிடுவதை உடல் கேட்க மறுத்தது. (சோம்பறித்தனமா
இருந்ததை தான் கொஞ்சம் பில்டப்பா வேறு மாதிரி சொல்றேன்). யோகா போனபிறகு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. இதை கொஞ்சம் வாய்விட்டு சொல்லிவிட்டேன். வீட்டிலும், அலுவலுகத்திலும் இதையே சொல்லி, என்னிடம் நிறைய வேலை வாங்குகிறார்கள். அது ஒரு தனிக்கதை.

• பழங்குடியினர் மாதிரி சூரியன் வருவதற்கு முன்பே, எழுந்து வேலைகளை தொடங்கிவிட வேண்டும் என்பது பல ஆண்டுகள் (!) கனவு. இப்பொழுது சாத்தியப்பட்டிருக்கிறது. வகுப்பு நேரம் 5.30 முதல் 6.30 வரை. அதனால், 4.45 க்கே எழுந்துவிடுகிறேன்.

• உணவு மற்றும் சுவாச ஒவ்வாமை பிரச்சனையால் நுரையீரல் தொந்தரவு இருந்தது. யோகாவும், மூச்சுப்பயிற்சியும் செய்வதால் இப்பொழுது தொந்தரவு நிறைய குறைந்திருக்கிறது.

• பெரு நகர வாழ்வில் இயல்பாய் எழும் மனப்பதட்டம் கொஞ்சம் குறைந்து, நிதானத்துடன் இயங்க முடிகிறது.

இன்னும் எழுதுவேன்.

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நல்லது குருத்து. நாளையிலிருந்து காலை ஐந்து மணிக்கு வகுப்பை துவங்கிவிடலாம்

-யோகா மாஸ்டர்

ராஜ நடராஜன் said...

நல்லது பற்றி சொல்லும் போது வராமல் இருந்தால் எப்படி?

குருத்து said...

//நல்லது குருத்து. நாளையிலிருந்து காலை ஐந்து மணிக்கு வகுப்பை துவங்கிவிடலாம்

-யோகா மாஸ்டர்//

ஏன் இப்படி?

காலை 4.45க்கு எழவே சிரமமாயிருக்கும் பொழுது....

வேணாம் மாஸ்டர். துன்புறுத்தாதீங்க!

குருத்து said...

//நல்லது பற்றி சொல்லும் போது வராமல் இருந்தால் எப்படி?//

நன்றி நடராஜன்.

தொடர்ந்து எழுதுவேன்.

சந்திப்பு said...

பல சுவராஸ்யமான குறிப்புகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள். அப்படியே ஒரு எட்டு எட்டி என்னுடைய சந்திப்பில் "சூப்பர் பிரைன் யோகா" பற்றி எழுதியிருக்கிறேன். அதையும் படியுங்கள். வாழ்த்துக்கள் சாக்ரடீஸ்

Anonymous said...

//இதை கொஞ்சம் வாய்விட்டு சொல்லிவிட்டேன். வீட்டிலும், அலுவலுகத்திலும் இதையே சொல்லி, என்னிடம் நிறைய வேலை வாங்குகிறார்கள்//

நம்மாளுங்க பிரச்சனையே இதுதான் கொஞ்சம் நல்லா ஃபீல் பண்ணாலும் போய் அத அப்படியே வீட்டிலேயும் ஆபீசுலேயும் சொல்லிடவேண்டியது..

என்னதான் உடல் புத்துணர்ச்சியோடு இருந்தாலும்

அயோ, யம்மா முடீல... உன்னாலதான் இந்த யோகாவுக்கு போனேன், தூக்கம் போச்சு, ஆபீசுல வேல செய்யவே முடீல, டயர்டா கீது போன்ற எதிர் பில்டப்களை வீட்டிலேயும்...

ஏற்கனவே நீங்க குடுக்குற டார்ச்சராலதான் உடம்பு ரிப்பேராகி நான் யோகாவுக்கு போயிட்டிருக்கேன் நீங்க எக்ஸ்டிராவா வேல குட்தீங்கன்னா மறுபடியும் டென்சன் ஜாஸ்தியாயிடும் அப்புறம்,அப்படியாச்சுன்னா ஒரு வார மெடிக்கல் லீவு போட்டு பிராணாயபத்ராசலேஸ்வரசிம்மாசனம் பிராக்டிஸ் பண்ணனுமின்னு மாஸ்டர் சொல்கிறாருன்னு ஒரு டெரர் பில்டப்புகளை ஆஃபீசுலயும் கெளப்ப்பனும்

ஓபி அடிப்பதை ஒரு கலையாக வளர்த்து வரவேண்டிய கட்டாயத்தை குருத்தின் அனுபவம் உணர்த்துகிறது.

குருத்து said...

// "சூப்பர் பிரைன் யோகா" பற்றி எழுதியிருக்கிறேன். //

நன்றி. கண்டிப்பாக படிக்கிறேன்.

ஓ.பி.டாட்.காம் அவர்களே!

நான் கொஞ்சம் பேச்சு குறைவாக பேசுகிறவன் தான். பாருங்க! கடந்த 5 மாதங்களாக கிளாஸ் போன பிறகு, தான், யோகா பற்றியே பேசுகிறேன்.

என் நண்பன் ஒருத்தன் 1 வாரமா போறான். ஒரு வருடம் செஞ்ச மாதிரி அவ்வளவு பேசுறான். தாங்க முடியல!