> குருத்து: ஈழம் (நீலிக்)கண்ணீர் + தலைவர்கள் = தேர்தல்!

March 26, 2009

ஈழம் (நீலிக்)கண்ணீர் + தலைவர்கள் = தேர்தல்!


அலைகள்
ஓயாது விளையாடும்
அழகான தீவு!

குண்டுகள் விழுந்து
நொடிக்கொருமுறை
பூமி அதிர்கிறது.

திரும்பிய திசையெல்லாம்
பிணங்கள்!

பரம திருப்தியுடன்
பறக்க முடியாமல்
கழுகுகள்
புதிய பிணங்களுக்காய்
ஆவலாய்
காத்துக்கொண்டிருக்கின்றன.

****

வானம் வெறித்துப்
பார்க்கிற கண்கள்
தீயில் வெந்த உடல்கள்
பிளாட்பாரத்தில் - வரிசையாய்
கிடத்தப்பட்டிருக்கின்றன

பிணங்களை காட்டி காட்டி
சிலர்
ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்

அருகில் போய்
உற்றுக்கேட்டேன்
"ஓட்டு"

***

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

good poem.

நொந்தகுமாரன் said...

தமிழக தமிழர்களை நன்றாகவே அம்பலப்படுத்துகிறது.