> குருத்து: வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!

December 27, 2010

வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!தமிழ்மணம் நடத்துகிற போட்டியில், முதல் சுற்றில் குருத்து தளம் கலந்து கொண்ட கீழ்க்கண்ட மூன்று பதிவுகளும் தேர்வாகியிருக்கின்றன.

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில்...

வாங்கப்படாத பிறந்தநாள் கேக்!

அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில்...

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!

நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில்...

நான் வித்யா - புத்தக அறிமுகம்!

குருத்து தளம் கலந்துகொண்ட மூன்று பதிவுகளிலும், ஒடுக்கப்பட்டவர்களாகிய தொழிலாளர்கள் மற்றும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வலி மிகுந்த வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில், பல்வேறு கருத்துகளில் எழுதிய பதிவுகள் போட்டியிடுகின்றன. பின்னாடி தள்ளப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து அங்கீகாரம் தந்து இருக்கிறார்கள்.

வாக்களித்த பதிவர்களுக்கு என் அன்பு நன்றிகள். தேர்வாகியுள்ள மற்ற பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

குருத்து.

4 பின்னூட்டங்கள்:

பிரியமுடன் ரமேஷ் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே..

ஜோதிஜி said...

போட்டியாளராக இருந்தாலும் நீங்க ஜெயிக்க வேண்டும்.

குருத்து said...

வாழ்த்து சொல்லிய ரமேஷ், ஜோதிஜி அவர்களுக்கு நன்றி. நீங்களும் சமூக அக்கறையோடு நன்றாக எழுதிகிறீர்கள். நமக்குள் இருக்கும் போட்டி ஆரோக்கியமான போட்டி. நன்றாக எழுதுகிறவர்களில் யார் ஜெயித்தாலும் வெற்றி தான்.

பிரியமுடன் ரமேஷ் said...

//நமக்குள் இருக்கும் போட்டி ஆரோக்கியமான போட்டி. நன்றாக எழுதுகிறவர்களில் யார் ஜெயித்தாலும் வெற்றி தான்.//

உண்மைதான் நண்பரே..