> குருத்து: அணுஉலை மின்சாரம் இனி ஜப்பானில் இருக்காது!

January 1, 2012

அணுஉலை மின்சாரம் இனி ஜப்பானில் இருக்காது!


அணுஉலை மின்சாரம் இனி ஜப்பானில் இருக்காது! - பேரா. ஹிரோசி யமாஷிடோ.

ரபி : கூடங்குளம் அணுஉலைகள் வேண்டுமா? வேண்டாமா என்ற வாத பிரதிவாதங்கள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட அணுக்கசிவுக்கு பின் அணு உலைகள் தொடர்பாக ஜப்பானில் இன்றைய நிலைபாடு என்ன?

பேராசிரியர் : நாங்கள் ஏற்கெனவே ஹிரோசிமா, நாகசாகியில் விழுந்த அணுகுண்டுகளின் தாக்கமே இன்னும் பல தலைமுறை ஜப்பானியர்களிடம் இருக்கும். அரசாங்கமும் முதலில் அணு உலைகள் தொடர்பாக அவை ஆபத்தில்லை என்றே மறுத்து வந்தது. ஆனால் புகுசிமா விபத்துக்கு பின்னர் அணுஉலையால் பெறப்படும் மின்சாரத்தை அடியோடு குறைத்து வருகின்றது. தற்போது ஓரிரு அணுஉலைகள் மட்டுமே இயங்கி வருகின்றது. அவையும் விரைவில் நிறுத்தப்படும்.

பெரும்பாலான அணு உலைகள் மூடப்பட்டதால் கோடையில் மின்சார தட்டுபாடு வருமோ என்ற அச்சம் ஜப்பானியர்களிடம் இருந்தது. ஆனால் நாங்கள் ஒரு மின் விளக்கு தேவை என்றால் அதனை அப்போது மட்டுமே பயன்படுத்துவொம். தேவையற்ற நேரத்தில் வீணாக அதனை எரியவிட மாட்டோம். ஏசி அறைக்குள் முடங்கி இருப்பதை காட்டிலும் காற்றோட்டமாக வீடுகளை மாற்றியும் வருகின்றோம். இதனால் மின்சாரமும் மிச்சமாகின்றது! என்றார்.

****

பேராசிரியர் யமாஷிடோ. சென்னை பல்கலைக்கழகத்தில் 1987ஆம் ஆண்டு இந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது ஜப்பான் டோஹகு பல்கலைக்கழத்தின் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

****

நன்றி : இராமேஸ்வரம் ரபி

2 பின்னூட்டங்கள்:

அ. வேல்முருகன் said...

ரசியாவிற்கோ, மன்மோகனுக்கோ கேட்டுகுமா உங்கள் கருத்து

குருத்து said...

இருவருக்கும் கேட்காது! மன்மோகன்சிங்கிற்கு அவருடைய எஜமான்கள் பேசினால் மட்டுமே கேட்கிறது.

நம் குரல் நம்முடைய மக்களுக்கு கேட்டால், போராட்டங்களுக்கு திரண்டால், அணு உலையை இயக்குவதை நிறுத்திவிடலாம்.

தங்கள் கருத்திற்கு நன்றி வேல்முருகன்.