> குருத்து: பெண் கல்வி!

April 19, 2013

பெண் கல்வி!

தெரிந்த சூப்பர்வைசர் ஒருவர். அன்பான, அதிர்ந்து பேசாத ரொம்ப பொறுப்பான மனிதர் அவர். அவருடைய பெண் பிளஸ் 2 எழுதியுள்ள தன் மேற்படிப்புக்காக கடந்த ஒரு மாதகாலமாக ஒரே யோசனை.

பெண்ணுக்கு ஏர்ஹொஸ்டல்ஸ் படிக்கனும்னு ஆசை! படிப்புக்காக ஏற்பாடு செய்த நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் படிப்புச் சந்தையில் தெரிந்தவர் ஒருவர் விவரம் சொல்லியிருக்கிறார்.

"3 மொழிகள் தெரிந்திருக்கவேண்டும்.  ஸ்டைலா சிவப்பா/வெள்ளைத் தோலா இருக்கனும்.  உயரமா இருக்கனும்.  6 மாத கோர்ஸ் 1 லட்சம் ஆகும். 25 வயசுக்கு மேலே வேலை செய்யமுடியாது.அதற்கு மேலே வேறு படிப்பு படித்து, வேறு வேலைகள் தேடிக்கொள்ளவேண்டும்" என்று சொன்னதும், தலை கிர்ரென சுற்றி வேண்டாம் என முடிவு செய்து கிளம்பிவந்துவிட்டார்.

சொந்தங்கள் "நம்ம சாதியில எவனும் கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு அனுப்ப மாட்டான். நீ லட்சத்தில் செலவு செய்து, தொழிற்கல்வி படிக்க வைச்சாலும் சுத்த வேஸ்ட். அதனால் ஏதாவது டிகிரி படிக்கவை!" என ஆலோசனை செய்கிறார்கள்.

"பெண்ணின் மனநிலையோ சிரமப்படாத எளிதான‌ வேலை. நல்ல சம்பளம்" என்பதாக சிந்திப்பாக கூறுகிறார்.

இன்னும் பல ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஒரே யோசனையாக இருக்கிறது என கவலைப்பட்டார்.

ஒரு பெண்ணின் கல்வியை தீர்மானிப்பதில் எத்தனையோ காரணிகள் உள்வேலைகள் செய்கின்றன. இறுதியில் அந்த பெண் என்ன படிக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.0 பின்னூட்டங்கள்: