நாயகன் கைதிகளை சிறையில் இருந்து அழைத்து செல்லும் ஆயுதப்படை தலைமை காவலராக இருக்கிறார். வேலையில் தன் நிலையில் இருந்து நியாயமான கேள்விகளை எழுப்புவராகவும் இருக்கிறார்.
ஒரு முசுலீம்
இளைஞர் தன்னுடைய கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒருவர் காதலிக்க… அதில் பிரச்சனைகள்
எழுகின்றன. ஒருமுறை கைகலப்பில் எதைச்சையாக காதலியின் தந்தையை தள்ளிவிட, அவர் தலையில்
அடிப்பட்டு இறக்கிறார். அதற்கான விசாரணையில்
தண்டனை கைதியாக இருக்கிறார்.
இந்த இளைஞரை
நாயகன் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பொழுது, நடைபெறும் அனுபவங்கள் தான் மொத்த
கதையும்!
***
டாணக்காரன்
படத்தை எழுதி, இயக்கிய தமிழ், இந்த கதையை எழுதியிருக்கிறார். எங்கேயும் இயல்பு மீறாமல்
இருப்பது அழகாக இருக்கிறது. எளிய மக்கள் மீது
கருணையாய் இருங்கள் என்பது தான் லைன். அதை அழகாக இயக்கி அந்த செய்தியை கடத்தியிருக்கிறார்
சுரேஷ் ராஜகுமாரி. வாழ்த்துகள்.
படத்தில்
ஆங்காங்கே போகிற போக்கில் சொல்லப்படும் விசயங்களை
நாம் உற்று கவனித்தால், நிறைய விசயங்களை புரிந்துகொள்ள முடியும். தமிழ் ஈழ போராட்டத்தில்
தீக்குளித்த முதல் இளைஞர், விசாரணைக் கைதியாகவே
ஐந்து ஆண்டுகள் சிறையில் இருப்பது, தண்டனை கூட இத்தனை ஆண்டுகள் ஆகாது என படத்திலேயே
சொல்வார்கள். வழக்காட வழக்கறிஞரை நியமிக்க முடியாமல் இருப்பது இப்படி நிறைய.
நாயகனாக விக்ரம்
பிரபுக்கு நல்ல பாத்திரம். அந்த இளைஞர், அந்த பெண் எல்லோரும் பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள்.
இந்த மாதிரி
கதையம்சம் கொண்ட படங்கள் தான் திரை உலகை காப்பாற்ற போகின்றன.
அவசியம் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment