அனைவருக்கும் வணக்கம்* வருங்கால வைப்பு நிதி குறித்த தொடர் கட்டுரையின் வரிசையில்…24 வது கட்டுரையாக தொழில் உலகம் *ஜனவரி 2025 இதழில்* வெளிவந்துள்ளது. இங்கு பகிர்கிறேன்.
இந்த இதழில் மூன்று முக்கிய விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறேன்.
1. பணியாளர் விலகிய தேதி : ஏன் அவசியம்? யாருக்காக? என்ன பயன்?
2. EPF – நேபாளம் போன்ற வெளிநாட்டு தொழிலாளர்களை இணைக்க முடியுமா?
3. EPF : பெயரில் உள்ள குழப்பம் - ஆகையால் வேலையில் சேர இயலவில்லை
தேவையானவர்கள் படியுங்கள். தேவையானவர்களுக்கு அனுப்புங்கள்.
ஒரு தகவல். தொழில் என்ற அடிப்படையில் முதன்மையாக ஜி.எஸ்.டி சேவையை தான் நிறைய நிறுவனங்களுக்கு செய்துவருகிறேன். கூடுதலாக தான் பி.எப்., இ.எஸ்.ஐ தொடர்பான சேவைகளை நிறுவனங்களுக்கு கவனித்து வருகிறேன்.
தனிநபர்களின்
பி.எப் நிதி., ஓய்வூதியம்
தொகை
பெறுவதற்காக
நான்
விண்ணப்பித்து
தரும்
வேலையை
செய்வதில்லை.
காரணம்
- பணியாளர்களுக்கான
தளம்
நத்தை
வேகத்தில்
வேலை
செய்கிறது.
ஒவ்வொரு
கட்டத்திலும்
ஓடிபி
(OTP) கேட்கிறது.
அவ்வளவு
நேரம்
நமக்கு
இல்லை
என்பது
இயல்பாக
இன்னொரு
காரணம்.
ஆகையால் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது கேட்டால், என்னுடைய எண்ணை கொடுத்து பேச சொல்கிறீர்கள். மகிழ்ச்சி. விவரங்களைக் கேட்டு, அதை எப்படி செய்யலாம் என பதில் சொல்லலாம். ஆனால் விண்ணப்பிக்கும் வேலையை செய்வதில்லை.
புரிதலுக்கு நன்றி.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721



0 பின்னூட்டங்கள்:
Post a Comment