எனக்கு சட்டென்று இந்தக் கவிதை நினைவு வந்தது.
எமிலி டிக்கின்சனின் கவிதை.
”மூழ்குதல் அத்தனை துயரமானதில்லை
மூழ்காமல் இருக்க நாம் செய்கிற முயற்சிகள் போல
மூழ்கும் மனிதன் மூழ்கும் முன்பு
மூன்றுமுறை மேலெழும்பி
வானத்தைப் பார்க்க வருவான் என்று சொல்லப்படுகிறது
பிறகு அவன் நேரடியாக அமிழ்ந்துபோய்விடுகிறான்
அந்த அந்தகாரத்தில்
நம்பிக்கையும் அவனும் கடைசியாகப் பிரிகிற
ஒரு கணத்தில்.”
நான் பலத்த சப்தத்துடன் வெடித்து அழ ஆரம்பித்தேன்.
- போகன் சங்கர்
"போகப்புத்தகம்"… லிருந்து
0 பின்னூட்டங்கள்:
Post a Comment