> குருத்து: பூப்பு – ஆசிரியர் ரேணுகா தேவி மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்!

April 2, 2022

பூப்பு – ஆசிரியர் ரேணுகா தேவி மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்!


ஒரு பெண் பூப்படைதல் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. மனித குலம் அடுத்தடுத்து தலைமுறைகள் உருவாக வேண்டுமென்றால், இந்த நிகழ்வு நடந்தே தீரவேண்டும். அப்படி ஒரு முக்கியமான நிகழ்வை, இவ்வளவு சிக்கலாக்கி வைத்திருப்பது பெண்களுக்கு கேடு என்பது குறுகிய பார்வை. மனித குலத்திற்கே கேடு என்று சொல்வது சரியானது.


மாதவிடாய் காலத்திலும், அதற்கு முன்பும், பின்பும் உணவிலும், உணர்விலும் குடும்பத்தினரும், சமூகமும் கவனமாக இருக்கவேண்டும். மாதவிடாய் உருவாக்கிற உடலியல் மாற்றங்கள், வதைகளை விட, சுற்றி உள்ள சமூகம் உருவாக்கும் சிக்கல்களும், வதைகள் தான் அதிகம்.

நம் சமூகம் பின்தங்கிய சமூகம் தான். அரசு தான் மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளை களைவதில், பெண்களின் தேவைகளை புரிந்துகொண்டு, ஏற்பாடுகளை பள்ளியிலும், பொதுவெளியிலும் ஏற்படுத்தித்தரவேண்டும். போதுமான ஏற்பாடுகளை செய்து தரவில்லை என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது.

நான் அறிந்து ”மாதவிடாய்” குறித்து கீதா இளங்கோவன் ஆவணப்படம் ஒன்றை 2012ல் எடுத்திருந்தார். 39 நிமிடங்கள் ஓடும் படம். நல்ல படம் அதை நிறைய பிரதி எடுத்து, நண்பர்கள் மத்தியில் வாங்கி விநியோகித்தோம்., பகுதி மக்களுக்கு போட்டு காண்பித்தோம். அதற்கு பிறகு இந்த புத்தகம் தான் என் கண்ணில்பட்டது.

இந்தப் புத்தகத்தை மாணவிகளை மனதில் வைத்து எளிமையாக எழுதிய ஆசிரியர் ரேணுகா தேவி அவர்களுக்கும், முதல் வெளியீடாக கொண்டு வந்த வாலறிவன் பதிப்பகத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுத்தில் இருக்கிறது. இப்போதைய தலைமுறை காணொளி காட்சிகளைப் பார்த்து வளர்கிற தலைமுறை. அவர்கள் படிக்கவேண்டுமே என கவலை வருகிறது. இந்த புத்தகத்தை யாராவது ஒலிப்புத்தகமாக மாற்றியோ, பேசியோ ஒரு காணொளியாக வெளியிட்டால் இன்னும் பல லட்சம் பேரை சென்றடையும்.

பின்னூட்டத்தில்… இரண்டு சுட்டிகள் தருகிறேன்.

1. கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் ஆவணப்படம் குறித்த சுட்டி. பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=hM3ZF9XPDuY&t=148s

2. ”நாப்கின்” குறித்த பதிவொன்றை சங்கரி என்பவர் எழுதியுள்ளார். படியுங்கள்.

https://www.vinavu.com/2010/03/26/women-sankari/

விலை ரூ. 50
பக்கங்கள் : 50
பதிப்பகம் : வாலறிவன்

0 பின்னூட்டங்கள்: