இந்தியாவைப் பொருத்தவரை ஏப்ரல் 1 என்பது ஒரு நிதியாண்டில் முதல் நாள் என்பதால் இதனை நிதிப் புத்தாண்டு என்று கூறலாம்.
ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்ய வேண்டிய நிதித் திட்டங்களை இந்த முதல் நாளில் வகுத்துக்கொண்டு செயல்படும்போது மிகச்சிறந்த நிதி வெற்றியைப் பெற முடியும்.
சில ஆலோசனைகள்
1. சென்ற ஆண்டில் நீங்கள் சம்பாதித்த நிதி, செய்த செலவுகள், கட்டிய வரி, சேமித்த சேமிப்புகள், செய்த முதலீடுகள் என்னென்ன என்பதனை ஒரு முறை திரும்பிப் பாருங்கள். அதை செய்த பிறகு நீங்கள் செய்த நல்ல விஷயங்கள் உங்களை ஊக்குவிக்கும். தவறுகள் உங்களை உணரவைத்து மீண்டும் அவ்வாறு நடக்காத வண்ணம் வழிகாட்டும்.
2. இந்த ஆண்டு நீங்கள் செய்யவேண்டிய நிதிசார் திட்டங்களை ஒரு நோட்டில் அல்லது எக்செல் ஷீட்டில் முன்பே எழுதிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு Health insurance, Life insurance, retirement plan, long term investment goal, short term investment goal என்று அனைத்தையும் திட்டமிடுங்கள்.
3. இதுவரை நீங்கள் சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பை எழுதி கூட்டுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன்கள் அனைத்தையும் எழுதி அதையும் கூட்டி சொத்தின் மதிப்பில் இருந்து அதனை கழித்து Net worth என்னவென்று கண்டறியுங்கள். அதனைப் பெருக்க திட்டமிடுங்கள்.
4. உங்களது நேரடி வருமானம்(active income) , மறைமுக வருமானம்(passive income) அனைத்தையும் திட்டமிடுங்கள். அதில் மறைந்த வருமானத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தியுங்கள்.
5. உடல் நலத்தை கெடுக்கும் வீண் செலவுகள் எங்கே செய்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். அதனை குறைத்து அதனை ஒரு முதலீடாக நீண்ட கால முதலீடு செய்ய திட்டமிடுங்கள்.
6. மருத்துவ ஆலோசனை போல ஒரு நிதி ஆலோசனை ஆண்டிற்கு ஒருமுறை நல்ல நிதி ஆலோசகரிடம் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு காட்டும் வழிகாட்டுதல் பல லட்சங்களை கொண்டுவரும், மிச்சப்படுத்தும்.
7. இதுவரை செல்லாத இடங்களுக்கு அல்லது தேசங்களுக்கு செல்வதற்கு திட்டமிடுங்கள். அதற்காக சேமிக்கவும் செய்யுங்கள். அது உங்களுக்கு இன்னும் சம்பாதிக்க தூண்டும்.
8. நிதிசார் புத்தகங்களுக்கு, சந்திப்புகளுக்கு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதில் சிறிதளவு முதலீடு செய்யுங்கள். அறிவில் செய்யும் முதலீடு பல மடங்கு உங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும்.
9. உங்கள் வீட்டில் அல்லது உங்களுக்கு கூட பத்தாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய வாகனத்தையோ பொருட்களையோ மாற்றுங்கள். அந்த மாற்றம் உங்களுக்கு உளவியல் ரீதியாக பணம் சம்பாதிக்க தூண்டுகோலாக இருக்கும்.
10. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக கூட இருக்கட்டும் கொஞ்சம் நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள். சமூக காரியங்களுக்கு நன்கொடை கொடுங்கள். அதுவும் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த மகிழ்ச்சி ஒரு போதை. அதற்காகவே சம்பாதிக்க ஆசை கொள்ளச்செய்யும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment