வழக்கமாக பொருளாதார வல்லுநர்கள் அட்வைஸ் பண்ணும்போது, உங்களது சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா, நான் இன்னொன்று சொல்கிறேன். நீங்கள் செய்யும் இரண்டாவது செலவு உங்களுக்கான சொந்த செலவாக இருக்கவேண்டும். சேமிப்பை விட இது ரொம்ப முக்கியம். இன்னும் சொல்லப்போனால் சேமிப்பே இரண்டாம் பட்சம்தான்.
ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். பல சைக்கோக்கள் உருவாவதற்கு அவர்கள் கைக்கொள்கிற "தியாக உணர்ச்சிதான்" காரணம். ஒரு நல்ல பேண்டோ சட்டையோ வாங்காமல் பையன் படிப்புக்கும் பெண் படிப்புக்கும் செலவு பண்ணும் தகப்பன். குழந்தைகளுக்கு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போதும் அந்த பழைய நோக்கியா போனில் செட்டில் ஆகும் அம்மா. எப்போதும் கிழிந்த ஜட்டியையே போட்டுக்கொண்டு அதை தியாகமாக கற்பனை செய்துகொண்டிருக்கும் மாமாக்கள் இவர்களால் நிறைந்திருக்கிறது உலகம்.
வீட்டிற்கு இப்படி தியாகம் செய்து ஓடாக உழைக்கும் இந்த அடிமைகள் சமூகத்திற்கு என்ன மாதிரியான தீங்குகளை விளைவிப்பார்கள் என்று பாருங்கள். பெரும்பாலும் மிஸ்ட் கால் கொடுப்பார்கள். ஓசி குடி குடிப்பார்கள். டீயை ரொம்ப நேரம் ஊதி ஊதிக் குடிப்பார்கள். சேர்ந்து உணவு அருந்தியபிறகு பில் கொடுக்கும் நேரத்தில் அவர்களுக்கு போன் வரும். யார் என்ன பொருள் வாங்கினாலும் அது என்ன விலை என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அது அழகாக இருக்கிறதா என்பது முக்கியமே இருக்காது. இவள் என் மகன் என் மகள் என்று நண்பர்கள் யாராவது அறிமுகப்படுத்தினால், என்ன படிக்கிற, எந்த ஸ்கூல், என்று கேட்டுவிட்டு அப்படியே திரும்பி எவ்ளோ ஃபீஸ் கட்டுறீங்க, அந்த அளவுக்கு ஒர்த்தா, டியூஷன் எங்க போட்ருக்கீங்க அந்த ஃபீஸுக்கு அது ஒர்த்தா போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்பார்கள். இதை விட அந்த ஸ்கூல் டீச்சர்களுக்கு பூப்ஸ் நல்லாருக்குமா என்று கேட்கும் தகப்பன் மன ஆரோக்கியம் உள்ளவன்.
இந்த ஓல்மாரித்தனம் ஏன் ஒரு மதமாக நம் ஆட்களிடம் இருக்கிறது என்பதைக் கள ஆய்வு செய்து நான் கண்டுபிடித்த முடிவுகளையே இங்கு சொல்கிறேன். தனக்கென்று இவர்கள் எதுவுமே செய்துகொள்வது கிடையாது. எது செய்தாலும் குடும்பத்த்தோடு சேர்ந்து செய்வது என்பதாக டியூன் ஆகியிருக்கிறார்கள். அப்படி செய்து செய்து, தான் ஒரு தனி மனிதன் என்கிற சொரணையே அற்றுப் போய்விட்டது. அது சுரண்டலாக மொன்னைத்தனமாக மாறிவிட்டதைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த கொடூர தவறுகளை சமன்படுத்தும் காரியத்தைத்தான் அவர்களது தியாக உணர்ச்சி செய்கிறது. வெளி ஆட்களுக்கு கொடூர மொக்கையாக இருக்கும் இவர்கள் எப்படி வீட்டில் மட்டும் தியாகிகளாக இருக்கிறார்கள்?
இதிலிருந்து வெளியேற சில வழிகள்.
கொஞ்சம் பணம் இருந்தாலும் சரி, தனக்கென்று ஏதாவது வாங்குங்கள். வெறும்
அழகுணர்ச்சிக்காகக் கூட அது இருக்கட்டும். ஒரு சிறிய பிளாஸ்டிக் ரோசாப்பூ, ஐந்து ரூபாய் கூட இருக்கலாம், நீங்கள் பில் பே பண்ணும் மேசை பக்கத்தில் இருக்கிறது என்று வையுங்கள், சும்மா வாங்குங்கள். பொண்டாட்டிக்கோ, கேர்ள்பிரண்டுக்கோ கொடுங்கள். இல்லையா கொஞ்ச நேரம் சும்மா கையில் வைத்திருந்துவிட்டு தூக்கிக் கீழே போடுங்கள். பணம், மதிப்பு என்று அந்த சில்லறை விஷயத்துக்கு அல்லாடாதீர்கள்.
தனியாகப் போய், ஏதாவது பர்சேஸ் பண்ணுங்கள், ஒரு ஜட்டியோ பணியனோ கிழியும் வரைக் காத்திருக்காதீர்கள். அது கிழியாவிட்டாலும் சில மாதம் கழித்து மாத்துங்கள். பொண்டாட்டிக்கு, கேர்ள் பிரண்டுக்கும் வாங்கலாம். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. இது ரொம்பவும் நுணுக்கமானது. இது உங்களுக்குப் பிடிக்கிறது வாங்குகிறீர்கள். இதுவேதான் பெண்களுக்கும். புருஷனுக்குப் பிடிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. தூக்கிப் போடட்டும். பரவாயில்லை.
எப்போதும் படுக்கையறைக்கு வரும்போது சாம்பார் தாளித்த வாசனை நைட்டியின் நெஞ்சுப் பகுதியில் கமழக் கமழ மனைவி வருகிறாளா, நைட்டியை உங்கள் கையாலேயே உருவி எடுத்து விடுங்கள். மிதியடியாக கட்டிலுக்குக் கீழே போடுங்கள். இல்லை அந்த சாம்பார் வாசனைதான் விரைப்பைத் தூண்டுகிறது என்றால் பரவாயில்லை. ஃபெட்டிஷ் ஓரளவுக்கு ஓகேதான்.
யார் வீட்டுக்குப் போனாலும் இது சொந்த வீடா வாடகை வீடா இந்த பொருள் எப்போது வாங்கினீர்கள் என்று கேட்காதீர்கள். கேபிள் டிவியா, செட்டாப் பாக்ஸா, கேரண்டி இருக்கா மூச்...
அந்த வீட்டுக் குழந்தைகள் பற்றி எதுவுமே விசாரிக்காமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்கள் என்பதற்காக சும்மாவாவது எதுவும் கேட்காதீர்கள். நீங்களும் சொல்லாதீர்கள். இரண்டு நண்பர்கள் மீட் பண்ணும்போது குடும்ப விவகாரம் பற்றி பேசாமல் வேறு ஏதாவது பேச வருகிறதா என்று முயன்று பாருங்கள்.
போனவுடனேயே உங்கள் wifi பாஸ்வோர்ட் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்காதீர்கள். netflix, amazon பாஸ்வோர்ட் கேட்பது அராஜகம். அப்படியே அவசரமாக பாஸ்வோர்ட் தேவைப்பட்டால் ஃபோனை அவரிடமே கொடுத்து டைப்படிக்க சொல்லுங்கள். horny neighbour என்று கூட இருக்கலாம். நீங்கள் பக்கத்து வீடாக இருக்கையில் மனவுளைச்சலாக இருக்கும்.
சுற்றியுள்ளவர்களுக்கு அதாவது குடும்பத்துக்கு உறவினர்களுக்கு ஏதாவது வாங்கினால், அதை முதலில் உங்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களுக்கு வாங்குங்கள். இது நீங்கள் கிஃப்ட் பண்ணும் பொருள் மீதான உங்கள் உடமை மனப்பான்மையை மட்டுப்படுத்தும். நான் எனக்குன்னு செஞ்சுக்காம உனக்காக பண்ணேனே போன்ற ஊளை சென்டிமென்டுகளை ஒழிக்கும். இது ரொம்பவும் முக்கியம்.
அடுத்தவர்களுக்கு கிஃப்ட் பண்ணுவதற்கு, ஹோட்டலில் சுடும் பொருட்கள், ஆபீசில் இருந்து எடுத்து வரும் பொருட்கள், உங்களுக்கு யாராவது கிஃப்ட் பண்ணும் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பரிசாக தருகிறீர்கள் என்பதால் நீங்கள் அற்பர் என்பது மாறிவிடாது.
சர்பிரைஸாக யாருக்காவது செலவு செய்யுங்கள். காரணமே இல்லாமல் இருக்கட்டும். உடனே மறந்துவிட முயற்சி செய்யுங்கள்.
எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொண்டு அதை மீண்டும் சந்திக்கையில் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். இப்படித்தான் நான் போன முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப, நீங்க கோவிலுக்கு கிளம்பிட்டிருந்தீங்க பையன் அடம் பண்ணிட்டிருந்தான், அன்னைக்கு நீங்க கொடுத்த காப்பியில் சுகர் கொஞ்சம் அதிகமா போட்டுட்டீங்க ஹி...ஹி...
யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். கேட்டாலும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசியுங்கள். இரண்டு நண்பர்கள் தொடர்புடைய காரியத்தில் இரண்டு பேருக்கும் சேர்த்து மூன்றாவது நண்பரிடம் கமிட் பண்ணாதீர்கள். அது டீ குடிப்பதாக இருந்தாலும் சுவர் ஏறிக் குதிப்பதாக இருந்தாலும் சரி...
சம்பளத்தில் இது எனக்கான பணம், எனக்கு மட்டுமேயான பணம் என்று கொஞ்ச பணத்தை மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அதைக் களிப்புடன் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், அது எவ்வளவு அற்பத்தனமாக இருந்தாலும் சரி, அடுத்தவரை சுரண்டாமல் காயப்படுத்தாமல் களிப்புடன் செலவு பண்ணிப் பாருங்கள். இணையருக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அதை மறந்துவிடுங்கள். ஆத்மார்த்தமாக மறக்க முயலுங்கள்..
- காரல் மார்க்ஸ் கணபதி, முகநூலில்....!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment