மூன்று போலீஸ் அதிகாரிகள் நண்பர்களாக இருக்கிறார்கள். மூவரில் ஒருவர் சுட்டு கொல்லப்படுகிறார். அந்த கொலையை துப்பறியும் மூவரில் ஒருவரான கதையின் நாயகன், தனது நண்பனும், உயரதிகாரியாய் இருக்க கூடியவரிடம் ”கொலையாளியை கண்டுபிடித்துவிட்டேன்” என சொல்லும் பொழுது, ஒரு மோசமான விபத்து நடக்கிறது. அதில் தன் பெயர் உட்பட எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.
உடல்நிலை தேறியதும், நாயகனிடம், “ நீ கொலையாளியை கண்டுபிடித்துவிட்டாய். ஆகையால் நீயே மீண்டும் இந்த வழக்கை எடுத்துக்கொள்” என உயரதிகாரியான நண்பன் சொல்ல, மீண்டும் துவக்கத்தில் இருந்து வழக்கை ஆராய துவங்குகிறார்.
உள்ளூர் ரவுடி, ஒரு கப்பல் படை அதிகாரி என சிலர் சந்தேக வளையத்துக்குள் வர, மெல்ல மெல்ல நூல் பிடித்து, கொலையாளி யார் என அறியும் பொழுது நாயகனுடன், நாமும் அதிர்ந்து போகிறோம்.
***
மும்பை போலீஸ் என இந்தப் படத்தைப் பற்றி முன்பே கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும், ஏதோ, மாபியா கும்பல் கதை என பார்க்காமல் விட்டுவிட்டேன். வேறு ஒன்றை தேடும் பொழுது, இந்தப் படத்தைப் பற்றி அறிந்ததும், நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பழைய படம் என்பதால், இலவசமாகவே பார்க்க கிடைத்தது.
***
மும்பை போலீஸ் என இந்தப் படத்தைப் பற்றி முன்பே கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும், ஏதோ, மாபியா கும்பல் கதை என பார்க்காமல் விட்டுவிட்டேன். வேறு ஒன்றை தேடும் பொழுது, இந்தப் படத்தைப் பற்றி அறிந்ததும், நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பழைய படம் என்பதால், இலவசமாகவே பார்க்க கிடைத்தது.
விபத்துக்கு முன்பு, நாயகன் ஒரு உயர் போலீசு அதிகாரி. தன் அலுவலக டேபிளிலேயே சரக்கு பாட்டிலை வைத்து அடிக்கும் ஆள். எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாத, அலட்சியமாக கையாளக்கூடிய ஒரு ஆள். ஆனால், விபத்து நடந்து, எல்லா நினைவுகளையும் தொலைத்த பிறகு, அவர் முற்றிலும் புதிய ஆள். நினைவுகள் தானே ஒரு மனிதனின் ஆளுமையை தீர்மானிக்கிறது. மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிர்பந்தம். ஆனால் அடிப்படை குணாம்சம், ரசனை எல்லாம் மாறிவிடுமா? தெரியவில்லை. ஆனால், நேர் எதிரான இரண்டு பாத்திரங்களையும் ப்ரித்வி ராஜ் நன்றாக செய்திருக்கிறார்.
மூன்று நண்பர்களும் வேறு வேறு காலக்கட்டங்களில் மும்பையில் வேலை பார்த்தவர்கள். ஆகையால், பத்திரிக்கைகள் மூவரையும் குறிப்பிட்டு எழுதும் பொழுது, ”மும்பை போலீஸ்” என கிண்டலாக எழுதுகிறார்கள். அதையே படத்திற்கும் பெயராக வைத்துவிட்டார்கள்.
பிரித்விராஜ்க்கு நண்பர்களாக, ரகுமானும், ஜெயசூர்யாவும் வருகிறார்கள். நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தின் கடைசி வரை அந்த சஸ்பென்சை உடைக்காமல் நன்றாக கொண்டு போயிருக்கிறார்கள்.
திரில்லர் விரும்பிகள் அவசியம் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment