> குருத்து: குடிப் பிரியர்களின் அட்டகாசம்!

July 25, 2023

குடிப் பிரியர்களின் அட்டகாசம்!


பெருங்குடிகாரன் அவன். இப்படி சொன்னா குடிப்பிரியர்களின் மனம் கெடும். பெருங்குடிப்பிரியன் அவன். அந்த அம்மாவின் கடைசிப் பிள்ளையும் அவன். வயது 30ஐ கடந்தாலும், இன்னும் பொறுப்பு என்றால் என்னவென்று கேட்பவன். "ஒழுங்கு மரியாதையாக மூணாவது தெருவில் இருக்கும் கதிரேசனின் மகளை பெண் கேட்டு கட்டி வை!" என மிரட்டுகிறான். அதுவும் வீட்டு வாசலில் நின்று ஊரே கேட்குமளவு கத்துகிறான். மானத்தை வாங்குகிறானே என அம்மா வருந்தி, கல்யாணம் கட்டி வைக்கும் என யோசிக்கிறான். என்ன ஒரு புத்திசாலித்தனம்!


எதற்கும் மசியாமல் அம்மா இருப்பதால், கடைசி ஆயுதமாக பூச்சி மருந்தை சாராயத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறான்.

சொன்னது போலவே, ரோசத்துடன் சரக்குடன் பூச்சி மருந்தை பொறுப்பாய் (கொஞ்சமாய்) குடித்துவிட்டு, அதே வாசலில் வந்து, வாயில் நுரை தள்ள விழுந்துவிடுகிறான். தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.

அவன் மிச்சம் வைத்துவிட்டு போனதை, இரண்டு பேர் பார்த்து, அதை பொறுப்பாய் முழுவதும் குடித்துவிட்டு, அவர்கள் அநியாயமாய் செத்துப்போகிறார்கள்.

இப்பொழுது மதுப்பிரியரான மகன் தான் அந்த இரண்டு பேருக்கும் ஊத்திக் குடித்து, இரண்டு பேரையும் சாகடித்துவிட்டதாக, பஞ்சாயத்து நடக்கிறது. குடிப்பிரியரான மகன் அவர்களின் சாவுக்கு தான் காரணமில்லை என நிதானமாய் சொன்னாலும், ஊர் நம்பவில்லை. இறுதியில், அம்மா தன்னிடம் மிச்சமிருந்த கடைசி நிலத்தையும் அந்த இரண்டு பேருக்கு கொடுத்துவிடுகிறார்.

இன்னும் முடியவில்லை. கொசுறு ஒன்று இருக்கிறது.

இந்த கதையைக் கேட்ட ஒருவர் "அந்த கதிரேசன் மகளைத்தான் கட்டி வைச்சிருலாம்ல!" என அப்பாவியாக கேட்கிறார்.

"அந்த பொண்ணு கல்யாணம் கட்டி, மூணு பிள்ளைகளுக்கு அம்மா. அவ புருஷன் ஒரு போலீஸ்காரன் வேறு. அதனாலேயே போலீசே அவனுக்கு பிடிக்காதாம்!"

இப்படி ஒவ்வொருவருக்கு "அதகளமான" அறிமுகம் என போகிறது கதை.

மீதியையும் பார்த்துவிட்டு, பிறகு படம் பற்றி எழுதுகிறேன்.

0 பின்னூட்டங்கள்: