> குருத்து: Bhediya (2022) ஓநாய் – இந்தி

July 31, 2023

Bhediya (2022) ஓநாய் – இந்தி


அருணாச்சலப் பிரதேசத்தில் காட்டின் வழியே சாலை அமைக்கும் ஒரு பணி நாயகன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. தன் முதலாளிக்காக  தன் வீட்டை அடமானம் வைத்து, அந்த வேலைக்கான முன்பணத்தை கட்டுகிறார். (!)

 

அங்கு போனால், மக்கள் எதிர்க்கிறார்கள். நாயகனோ, இளைஞர்களை அழைத்து “உங்களுக்கு மால், வைபை, ஸ்டார் பக்ஸ் இதெல்லாம் வேண்டாமா?” என ஆசைக் காட்டி, பெற்றோர்களை ஒத்துழைப்பு கொடுக்க சொல்லுங்கள் என பேசுகிறார். அது வேலை செய்கிறது.

 

இதற்கிடையில், நண்பர்களுடன் வீடு திரும்பும் பொழுது, அவரை ஓநாய் விரட்டி வந்து பின்பக்கத்தை கடித்துவிடுகிறது.   அன்றிலிருந்து அவர் பகலில் மனிதன், இரவில் ஓநாயாக மாறுகிறார்.

 

இவர் பணத்திற்காக, தன் நிறுவனத்திற்காக காட்டை அழிக்க ஊரில் உள்ள ஒவ்வொருவராக சரிக்கட்டுகிறார்.  அவரே ஓநாயாக இரவில் மாறி, காட்டை அழிக்க ஒத்துழைக்கும் ஆட்களை  ஒவ்வொருவராக கடித்துத் குதறுகிறார்.

 

இந்த முரண்பாட்டை எப்படி நாயகன் எதிர்கொண்டார் என்பதை  கொஞ்சம் திகலாகவும், கொஞ்சம் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

 

****


இந்த இயக்குநரின் முதல் படமான  ஸ்திரீ படத்தைப் பார்த்திருக்கிறேன். நல்ல பேய் படம்.  நகைச்சுவையும், பயமும் கலந்து தமிழில் எடுக்கிறார்களே அப்படி ஒரு படம்.  அவரின் மூன்றாவது படம் தான் இந்தப் படமும் நன்றாக எடுத்திருக்கிறார்.

 

படத்தின் கதை நாட்டுப்புறக் கதை போல தான் இருக்கிறது.  இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது படத்தின் அடிநாதமாக ஒலிப்பது நல்ல விசயம்.

 

நாயகன் வருண் தவான்,  நாயகியாக கீர்த்தி சனான்,  நண்பனாக வரும் அபிஷேக் என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வசனம், பாடல், இசை, ஒளிப்பதிவு, மனிதன் ஓநாயாக மாறும் தருணம்  என அனைத்தும் படத்தை நன்றாக  தூக்கி நிறுத்துவதற்கு உதவியிருக்கிறார்கள்.

 

தமிழில் நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.   ஜியோ சினிமா சானல் தளத்தில் இந்தியில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. தமிழில் எங்கு கிடைக்கிறது என தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

0 பின்னூட்டங்கள்: