> குருத்து: குடும்பஸ்தன் (2024)

February 4, 2025

குடும்பஸ்தன் (2024)


நாயகன் தான் காதலித்த பெண்ணை கலாட்டாகளுடன் திருமணம் செய்கிறார்.  அளவான சம்பளம். அதையும் விட அதிகமான செலவுகளுடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது,  வேலை செய்யும் இடத்தில் ஒரு சிக்கல் எழ, வேலையை இழக்கிறார்.  துணைவியார் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்துவருகிறார்.

 

எப்பொழுதும் மட்டம் தட்டுகிற அக்கா வசதியான வீட்டுக்காரர், வேலை போன விசயத்தை வீட்டில் சொன்னால் சிக்கலாகும் என கடன் வாங்கி சமாளிக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏகப்பட்ட சிக்கல்களுக்குள் தள்ள.. சமாளித்தாரா என்பதை மீதி படத்தில் சொல்கிறார்கள்.

 

வாழ்க்கை சிக்கல்களை சொல்வதில், பாதி இயல்பாக இருக்கிறது என்பதை திருப்திப்பட்டு கொண்டால், பாதி செயற்கையாக இருப்பது துருத்தலாக நிற்கிறது.  படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், நாயகன் ஏன் தன் வேலை போன விசயத்தைச் சொல்லலாம் அல்லவா! ஏன் சொல்லவில்லை? என்றாள் என் மகள்.  ஒரு வேலை போவது எல்லாம் இங்கு இயல்பான சமாச்சரமாகி பல வருடங்களாகிவிட்டது.

 

மச்சான்கள் குடைச்சல் இயல்பிலேயே நிறைய இருக்கிறது.  அதை சொல்லியிருக்கலாம். அவர் சீனா செல்கிறார். அதற்கான மெனக்கெடல்களை செய்கிறார் என்பது ஒட்டவில்லை.

 

ஒரு கட்டத்தில் நாயகன் மிகவும் காயப்பட்டு, களைப்படைகிறார்.  நம்மைச் சுற்றி உள்ள பெரும்பாலோர் தோற்கடிக்கப்பட்டு (Loosers) தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்.   இந்த கேள்வியில் இருந்து தான் படம் பார்ப்பவர் யோசிக்கவேண்டியது அவசியமாகிறது.  இந்த நாட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிற பலரும் ஏன் தோற்றுப்போகிறோம்?  சிலர் ஜெயிக்கிறார்கள் என்றால் எப்படி?

 

மொத்தப் படத்தையும் மணிகண்டன், சோமசுந்தரம் தாங்குகிறார்கள். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

 

நாயகன் பட்ட  பெரும் சிரமங்களை பழைய படங்களை போல சோகமாக எடுக்க முடியாது என சாப்ளின் கையாண்ட முறையில் எடுத்ததாக   சொல்கிறார்கள்.  இதுவே ஒரு முரண் தான்.  மிகைப்படுத்தல் தான் இங்கு பிரச்சனை. இயல்பாக சொல்லலாம்.

 

நீங்கள் பார்த்தீர்களா? என்ன உணர்ந்தீர்கள்?

0 பின்னூட்டங்கள்: