ஒரு சிறுமி தசரா திருவிழாவின் பொழுது, கடத்தப்படுகிறாள். மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறாள். அந்த வழக்கில் எந்தவொரு துப்பும் கிடைக்காததால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறது.
குழந்தையை பறிகொடுத்த அந்த அம்மா, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த அம்மாவிற்கு மொத்த நம்பிக்கையும் போகிறது. இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே இருக்க.. கதை துவங்குகிறது.
நடுத்தர வயது கொண்ட நாயகி போலீசு அதிகாரியாக இருக்கிறார். நாயகன் அவருக்கு கீழே வேலை செய்கிற இளநிலை அதிகாரி. அவன் சிறுவனாக இருந்த பொழுது தான் அவன் கண்முன்னே கடத்தப்பட்டாள். ஆகையால் அந்த வழக்கில் எப்படியாவது கொலை குற்றவாளியை கண்டுபிடித்துவிட வேண்டும் என விசாரிக்கிறான்.
இந்த சமயத்தில், அவனுக்கு ஒரு பழைய வாக்கி டாக்கி மூலம் கடந்த காலத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு போலீசு அதிகாரியோடு தொடர்புகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட நாட்களில்.. அதுவும் இரவு 11.11 (படத்தின் தலைப்பு) அளவில் ஒரு நிமிடம் மட்டுமே பேசமுடிகிறது. இப்படி பேசுவதன் மூலம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனால் சில குழப்பங்களும் ஏற்படுகிறது.
பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக, இந்த வழக்கிற்கு பிறகு, இன்னொரு பழைய கேசையும் அந்த குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். அதையும் அவர்கள் தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
***
ஊரில் இருந்து அண்ணன் மகன் வந்து இந்த தொடர் நன்றாக இருக்கிறது என சொன்னான். அதனால் பார்க்க துவங்கினேன்.
துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், இறுதி வரை விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் முன்பாகவும், பின்பாகவும் மாறி, மாறியும் பயணித்திருக்கிறார்கள்.
இந்த 15 வருட விசயம் இந்தியா சார்ந்ததாக தெரியவில்லையே! கொரியாவோடு சம்பந்தப்படுகிறதே என தேடிப் பார்த்தால், 2016ல்ன் ”சிக்னல்” ஒரு சீரிஸ் உண்டு. அதன் தழுவல் தான் என்கிறது விக்கிபீடியா.
சிக்னலை அப்படியே எடுத்து வைக்காமல் இவர்கள் நிறைய மாற்றம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் முன்பே சிக்னல் பார்த்திருந்திலாலும், நினைவுக்கு வரவேயில்லை.
நாயகனான ராகவ் ஏற்கனவே Kill படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார். அவரை இந்த தொடரில் நாயகனாக உயர்த்தியிருக்கிறார்கள். நாயகியாக வருபவரான கிருத்திகாவை இப்பொழுது தான் பார்க்கிறேன். கடந்த காலத்தில் வரும் அதிகாரியான தைர்யா, என மூவரும் முக்கியப் பாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். Umesh Bist இயக்கியிருக்கிறார்.
ஜீ5ல் தமிழிலேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு செய்தி. ஆகையால் திரில்லர் ரசிகர்கள் தாராளமாய் பார்க்கலாம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment