நாயகன் உள்ளூரில் சாதாரண போலீசாக இருக்கிறான். உள்ளூர் என்பதால் மக்களால் மதிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில்… நடந்துகொள்கிறான். மேலாதிகாரி சாதகமாக இருக்கும் பொழுது பலன்களை தருகிறது. சாதகமாக இல்லாத பொழுது அவமானத்தைப் பெற்றுத்தருகிறது.
இப்படி அவமானப்படும் பொழுது, அவனுடைய ஈகோ கடுமையாக சிக்கலாகிவிடுகிறது. எதையாவது செய்து குடைச்சல் கொடுக்கவேண்டும் என நினைக்கிறான்.
அதில் பயங்கர ரிஸ்க் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மேலிருந்தும், மக்களிடத்தில் இருந்தும் தொடர்ந்து புகார்கள் வந்து, தடுமாறி போகிறார்.
இந்த சமயத்தில் திடீரென ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரித்தால் தொடர் கொலைகளாக இருக்கின்றன. இதற்கு பிறகு யார் இருக்கிறார்கள் என முழு நீளப்படமும் செல்கிறது.
***
கேரளாவில் திருடன் மணியன் பிள்ளை மிகப்பிரபலம். திருட்டு. தொடர் திருட்டு. கைது. சிறை. ஒரு சமயத்தில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, தொழில் செய்து, மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று, கர்நாடகத்தில் அரசியல் கட்சியில் இணைந்து ஒரு பெரும்புள்ளியாக வரவேண்டிய ஆள். கடைசி நேரத்தில் கைதால் எல்லாம் நின்று போனது. மணியன் சொல்ல சொல்ல மனோராமாவின் ஆசிரியர் குழுவில் ஒருவர் எழுத அந்த தொடர் மிகப் பிரபலமானது.
இந்த படத்தின் முதல் பாதி கதை மணியனின் கதை தான். நாயகன் எப்படி திருடுவது என்ற நுணுக்கங்களை அந்த பாத்திரத்திடம் இருந்து கேட்டுத்தான் அறிந்துகொள்வான். படத்தில் அந்த திருடனின் பாத்திரத்தின் பெயர் கூட மணியன் தான்.
திருடுவதும் போதை தான். அதில் ஒரு திரில் இருக்கிறது. எப்படி குடிநோயாளிக்கு குடிக்காமல் போனால், பதட்டம் வருமோ! அதே போல திருடனுக்கும் பதட்டம் வரும். அதே போல ஆளில்லாத வீட்டில் திருடுவதில் என்ன கிக் இருக்கிறது? இருந்தால் தான் கிக்கே! என மணியன் பேசுவதாய் வசனம் வரும்.
இடைவேளை வரை சுவாரசியமாக இருந்த படம், பிறகு தொடர் கொலைகள் என படம் யூடர்ன் போடப்பட்டுவிட்டது. அது அத்தனை ஒட்டவில்லை. இறுதிகாட்சி எல்லாம் செம மொக்கை.
படத்தை மொத்தமாய் தாங்குவது ஆசிப் அலி தான். சில காட்சிகள் வந்தாலும், அந்த திருடனாக வரும் ஜாஃபர் இடுக்கியும் சிறப்பு. திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் தான் இயக்கியிருக்கிறார்.
பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment