நாயகனும், நாயகியும் இருவரும் துப்பாக்கியை (Sniper) தூரத்தில் இருந்து சுடுவதில் கெட்டிக்காரர்கள். இருவருக்கும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லையெனன தெரிந்தே அவர்களை ஒரு வேலைக்கு தெரிவு செய்கிறார்கள்.
வெளி உலகத்திற்கு தெரியாத, அந்த பள்ளத்தாக்கை இரகசியமாக பாதுகாக்கிறார்கள். கிழக்கு கோபுரத்திலும், மேற்கு கோபுரத்திலும் இருவரையும் காவல் காக்க தனித்தனியாக அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு வருடம் பணிக்காலம். அவர்களுக்கு தேவையானது எல்லாமும் அந்த கோபுரத்திலேயே உண்டு. வெளியுலக தொடர்பு கிடையாது. சம்பந்தப்பட்ட ஆட்களையே மாதம் ஒருமுறை ரேடியோ மூலம் தொடர்புகொள்ளலாம். அவ்வளவு தான்.
பள்ளத்தாக்கில் இருந்து யார் மேலே ஏறி வந்தாலும், சுட்டுவிடலாம் என்பது உத்தரவு. குறிப்பாக பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் இருக்கும் அந்த ஒற்றை நபரோடு பேசக்கூடாது.
நாட்கள் நகர்கின்றன. மெல்ல மெல்ல அறிமுகமாகி, போர்டில் எழுதி எழுதி பைனாகுலர் வழியாக பார்த்துப் பார்த்து பேச துவங்குகிறார்கள். திடீரென அங்கு ஒரு ஆபத்து வருகிறது. அது அவர்களை பல பிரச்சனைகளுக்கு இட்டு செல்கிறது.
பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
***
முதல் கால் மணி நேரம் அறிமுகம். பிறகு கால் மணி நேரம் காதல். பிறகு ஆக்சன் என படம் முழுவதிலும் நம்மை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் சில வசனங்கள், நாயகன் எழுதிய ”She Collapsed the Night” என்ற குறுங்கவிதையோடு படம் முடிவடைவது என்பதெல்லாம் ரசிக்க வைக்கிறது.
Doctor Strange எழுதி இயக்கிய Scott Deriickson இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். Fantastic four படத்தில் வரும் Miles Teller நாயகனாக வருகிறார். “The Menu” படத்தில் பார்த்த Anya நாயகியாக வருகிறார்.
ஆக்சன் ரசிகர்கள் பாருங்கள். ஆப்பிள் டிவியில் இருப்பதாக Just Watch தளம் சொல்கிறது. தமிழ் சப் டைட்டிலுடன் பார்க்க கிடைத்தது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment