சமீபத்தில் தினமலரில் ஜப்பான் பற்றி செய்தி பார்த்தேன்.
ஜப்பானில்
2003-ல் 34,487 தற்கொலைகள்,
2007-ல் 33,500 தற்கொலைகள்.
2003ல் தான் மிக அதிகம். 2006-ல் கொஞ்சம் குறைந்து மீண்டும் 2007ல் ஏறிவிட்டது.
365 ஆல் வகுத்துப் பார்த்தால் தினசரி 92 பேர்.
1997 கணக்குப்படி, ஜப்பானில் மக்கள்தொகை 12 கோடியே 60 லட்சம். அவர்களுடைய மக்கள்தொகைக்கு இது மிக அதிகம்.
மன உளைச்சல், நோய், கடன், குடும்ப பிரச்சனை - என காரணங்களை ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும், குறிப்பாக வேலைக்கு செல்லும் இளைஞர்களிடையே தற்கொலை மனப்பன்மை அதிகரித்திருக்கிறதாம்.
தற்கொலை செய்துகொள்கிறவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாம். 71 சதவிகிதம்.
ஜப்பானை பற்றி நம்மிடையே உள்ள பொதுப்புத்தி வேறாய் இருக்கிறது. ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். அவர்கள்
தங்களுடைய கோரிக்கைகளை, எதிர்ப்பைக்கூட எப்படி தெரிவிப்பார்கள் என்றால் நிறைய உற்பத்தி செய்து குவிப்பார்கள். இந்தியத் தொழிலாளர்கள் போல வேலை நிறுத்தம் செய்யமாட்டார்கள் என்பார்கள்.
இந்த செய்திக்கும் தற்கொலைக்கும்தான் அதிக நெருக்கம் இருப்பதாக படுகிறது.
இங்கு இந்தியாவில் உருவாகியிருக்கும் புதிய தொழிலாளிகளான கணிப்பொறி வல்லுநர்கள் அதிக நேரம் வேலை செய்வதும், அதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாவதும், தற்கொலைகள் தொடர்வதும் இந்தியாவில் புதிய செய்திகள்.
"கூலியுழைப்பு பாட்டாளிக்குச் சொத்தையா படைத்தளித்திருக்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம் தான்" - (ப. 67)கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ்.
இப்படி கடும் உழைப்பால் இவர்கள் உருவாக்குகிற தனி உடைமை மூலதனம் என்னனென்ன தீமைகள் சமூகத்துக்கு செய்யும் என்பது கணக்கில்லாதது.
சமீபத்திய செய்தி -
செலவைக் குறைக்கிறேன் பேர்வழி (Cost Cutting) என பல நிறுவனங்களில் பலரை வேலையே விட்டு தூக்குகிறார்களாம். குறிப்பாக - சீனியர்களுக்கு கொடுக்க கூடிய சம்பளம் அதிகமாக இருப்பதால், அவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்.
இங்குள்ள கணிப்பொறி வல்லுநர்கள், படித்த அறிவாளிகள் கனவில் மிதக்காமல், தரையில் கீழிறங்கி தன்னை தொழிலாளி வர்க்கம் என உணர்வதும், தன்னுடைய கோரிக்கைகளுக்காக மற்ற தொழிலாளி வர்க்கத்தினோரோடு இணைந்து போராடுவதும் தான் இதற்கு தீர்வு.
இல்லையில்லை. நாங்க மெத்த படித்தவர்கள். அறிவாளிகள். நாங்க பார்த்து கொள்கிறோம் என்றால், ஜப்பானியர்களுக்கு நிகழ்வது இங்கும் தொடரும். தாம் எதற்காக தற்கொலை செய்துகொள்கிறோம் என்ற உண்மை அறியாமலேயே.
August 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
ஜப்பானில் வேலைப்பளு, கடுமையான போட்டி ஆகியன தான், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு தள்ளுகின்றன.
இந்தியாவில் இருக்கும் கணிப்பொறி வல்லுனர்களை வைத்து அதிக நேரம் வேலை வாங்க வேண்டுமென்பதற்காகவே வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய வருகின்றன. இதையே தமது நாடுகளில் செய்வார்களானால், (ஏற்கனவே இருக்கும் சட்டக் கட்டுபாடுகளை மறந்து விட்டாலும் கூட) கடுமையான தொழிலாளர் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்திருக்கும்.
அருமையான விடயங்களை பாமரனுக்கும் புரியக்கூடிய எளிய தமிழில் தருகின்றீர்கள். இணையத்தில் இருக்கும் பிரயோசனமான வலைப்பதிவுகளில் ஒன்று.
-கலையரசன்
http://kalaiy.blogspot.com
//இதையே தமது நாடுகளில் செய்வார்களானால், (ஏற்கனவே இருக்கும் சட்டக் கட்டுபாடுகளை மறந்து விட்டாலும் கூட) கடுமையான தொழிலாளர் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்திருக்கும்//
நீங்கள் சொல்வது உண்மை தான்.
தங்கள் வருகைக்கு நன்றி கலையரசன்.
தி ஹிந்து நாளிதழ் சுட்டி http://www.thehindu.com/2008/06/21/stories/2008062156562000.htm
நந்தன்
Post a Comment