> குருத்து: பிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்

August 25, 2008

பிரான்ஸ் ஜோடி - இந்து முறைப்படி திருமணம்


முன்னொரு அனுபவம் : சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் வேலை செய்த பொழுது, சக ஊழியர்களில் ரத்தினம், சுஜாதா என இருவரும் வேலை செய்தனர்.

அப்பொழுது ரத்தினத்துக்கு வயது 23. சுஜாதாவுக்கு வயது 19. காதலிக்கும் வயது. இருவரும்
காதலித்தனர். நாளடைவில், இந்த விசயம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிந்து விட்டது.
அந்த பெண் வேலைக்கு செல்லக்கூடாது என சொல்லிவிட்டனர். இவர்களுடைய காதலை
மறுப்பதற்கு காரணம் சாதி பிரதானமாக இருந்தது. அந்த பெண் செட்டியார் சாதி. அவர்
பிள்ளைமார் சாதி.

இரண்டு நாள் கழித்து, வீட்டாருக்கு தெரியாமல், ரத்தினத்துக்கு சுஜாதா போன் பேசியது.
அழுதுகொண்டே, தனக்கு திருமண ஏற்பாடு வீட்டில் செய்வதாகவும், சாதியைச் சொல்லித்தான்
மறுப்பதாகவும், ஆகையால், "நீங்க எங்க சாதிக்கு மாறிடுங்க! என்றது.

*******

சமீபத்தில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த ஜான்மார்க் என்பவர் தனது நாட்டைச் சேர்ந்த தன்
காதலியான மரிஸை புதுச்சேரியில் இந்து முறைப்படி திருமணம் செய்தார் எனப் படித்தேன்.

மேலும், ஜான்மார்க் தனது பெயரை கண்ணன் என்றும், மரிஸ் தனது பெயரை ராதா என்றும்
மாற்றிக்கொண்டனாராம்.

ஜான்மார்க் - ஒரு விசயத்தில் தப்பித்துவிட்டார். தன் பெயரை கண்ணன் என்று மாற்றி, ஒரு இந்து பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தால்.. அவர் கதி அதோ கதியாயிருக்கும்.

ஜான்மார்க் என்ற கண்ணனை இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் அவரை நம்ம சாதி என
ஏற்றுக்கொள்வார்கள்? ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பின்பு, எப்படி அவருக்கு பெண் கொடுப்பார்கள்?

ஜான்மார்க் என்ற கண்ணன் பெண்ணைத் தேடித்தேடி கடைசியில் வெறுத்துப்போய் இருப்பார். இந்து மதத்தின் உண்மையான முகம் அறிந்து, நொந்து, வெந்து... பிரண்ட்ஸ் திரைப்பட வடிவேல் மாதிரி, "ஆணியே பிடுங்க வேண்டாம்டா!" என்கிற மாதிரி, "கல்யாணமே வேண்டாமடா! என சொல்லி பிரான்ஸ் பறந்திருப்பார். பிறகு, இந்து, இந்தியா கேட்டாலே உடலுக்குள் நடுக்கம் வரும் அவருக்கு.

3 பின்னூட்டங்கள்:

வெள்ளைக்காரன் said...

வெள்ளைக்காரன் என்றால் நம்மூர்கார பெண்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். உள்ளூரில் ஒரு பறையனையோ, பள்ளனையோ கட்டிக்கனும்னா ரொம்ப பிகு பண்ணுவாளுங்க. பன்னி கறியும் மாட்டுக் கறியும் சதா சாப்பிட்டு வளர்ந்த வெள்ளைக்காரன் என்றாலே ஒரே தனி கிக்குதான் போங்க.

Socrates said...

வெள்ளைக்காரன் அவர்களே!

நீங்கள் கடுப்பில் பெண்களைத் திட்டுகிறீர்கள்.

இதில் உள்ளார்ந்த விசயம் என்னெவென்றால்...

வெள்ளைக்காரனெல்லாம் இந்து மதத்தை மதிக்கிறார்கள். நாம் மதிக்க மறுக்கிறோம் என்ற நினனப்பில், தினமலர் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.

அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த பதிவிட்டேன்.

Dr.Anburaj said...

ஏன இப்படி முட்டாள்தனமாக கட்டுரைகளை எழுதுகின்றீா்கள். விட்டிற்கு வீடு வாசல்படி போல் ஏதோ ஒவ்வொரு காலமும் ஏதோ ஒரு பிரச்சனைகள் இருந்தே தீரும்.தீா்வுகள் வந்து கொண்டேயிருக்கின்றது.
1ஸ்ரீராமகிருஷ்ணா் பரமஹம்சா் இறந்த போது அன்னை சாரதாமணி தேவியாா் விதவைக் கோலம் போடவில்லை.மொடடை அடிக்கவில்லை.
2.ஸ்ரீராமகிருஷ்ணன்ா புணுால் சடங்கு உபநயனம் நடந்த போது தன் வீட்டில் தாய்க்கு சமமாக இருந்த பொற்கொல்லா் சாதியைச் சோ்ந்தவாிடம் முதல் பிச்சை எடுத்தாா் .
3. ரீராமகிருஷ்ணா் பரமஹம்சா் தாழ்ந்த சாதி என்று ஒதுக்கப்பட்ட மக்களின் கழிவறைகளைச் சத்தம் செய்தாா்
4.தாழந்த சாதிய என்று ஒதுக்கப்பட்ட சாதியில் பிறந்தவரை தனது சீடராக ஏற்றுக் கொண்டாாஃ.
நோய்களுக்குப் பஞ்சமில்லைதான். மருந்துகளுக்கும் பஞசமில்லை. இந்த நடவடிக்கையில் இந்து மதம் இந்து மதவெறி என்ற சொற்கள் அநாவசியம்.மேற்படி வாா்த்தைகள் இன்றியே இக் கருத்துக்களை எழுதலாமே.