> குருத்து: முதலாளித்துவ பொருளாதாரம்!

November 15, 2008

முதலாளித்துவ பொருளாதாரம்!

இன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவலாகி நிற்கின்றன. சந்தை சுதந்திரத்தை வலியுறுத்தி பல கோடிகளை சுருட்டிய முதலாளித்துவம் (முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் - ஏகாதிபத்தியம்) இவ்வளவு காலம் தண்ணீர் தொட்டிக்குள் நின்று கொண்டிருந்தது. தண்ணீர் இறங்கியதும் அதன் அம்மணத்தை உலகம் இன்றைக்கு பார்த்து காறித்துப்புகிறது.

முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே எல்லா கோளாறுகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். அந்த வரிசையில் முதலில் ...

முதலாளித்துவ பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணங்களாய் வரையறுப்பது.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு

கவனியுங்கள்
- மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் – இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால், பல்வேறு தொழில்களை நடத்தி வரும் முதலாளிகளின் கைகளுக்கு லாபம் போகிறது. உற்பத்தி அதிகமானால், ஏற்றுமதி அதிகமாகும். அதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் கிடைக்க என்ன இருக்கிறது.

பங்குச் சந்தை மதிப்பு உயர்வது, உண்மை மதிப்பு அல்ல! காகித மதிப்பு தான். சூதாடிகள் செயற்கையாக ஏற்றுகிறார்கள், இறக்க வைக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களில் இவர்கள் ஊக பேர வணிகத்தில் விளையாடி, கொள்ளையடித்து விலையை ஏற்றிவிடுகிறார்கள்.

• நிதி நிறுவங்களின் லாபம் - ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு நிறுவனமும் கணக்கு காட்டுகிறார்கள். 99% நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை 10% தான் காட்டுகின்றன. நட்ட கணக்கு கூட காண்பிப்பார்கள். அதில் வேறு சங்கடங்கள் இருப்பதால், தவிர்க்க முடியாமல், லாப கணக்கு காண்பிக்கிறார்கள். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு, பல மான்யங்களை அள்ளி வழங்குகின்றன. ஆனால், லாப வெறி கொண்ட பன்னாட்டு நிறுவங்கள் தனது லாபத்தை குறைத்து காட்டுகின்றன. தில்லியில் தணிக்கையாளர்களுக்கான நடந்த சிறப்பு கூட்டமொன்றில் நிதியமைச்சர் சிதம்பரம் இது குறித்து நிறைய வருத்தப்பட்டார்.(!)

0 பின்னூட்டங்கள்: