> குருத்து: ஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

November 22, 2008

ஊகவணிகம் – பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?மீண்டும் பங்குச் சந்தைக்கு வருவோம். பங்கு, பங்குச்சந்தை, பங்குச் சந்தை சூதாட்டம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த பதிவில் ஊக வணிகம் பற்றிப் பார்க்கலாம்.

//ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.// - புதிய கலாச்சாரம்.

பங்குச் சந்தைச் சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த காலங்களிலும் நெருக்கடி இருந்திருக்கின்றன. இப்பொழுது இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி ஏன்? காரணம் இருக்கிறது. நிதி மூலதன கும்பல்கள் நடத்திய ஊக வாணிகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிதான் காரணம்.

முதலில் உண்மை வணிகம், ஊக வணிகம் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

உண்மை வணிகம்

என்னிடம் 100 கிலோ கடலை இருக்கிறது. இன்னொருவருக்கு கடலையின் தேவை இருக்கிறது. நான் அதன் விலை ரூ. 1000 என்கிறேன். இருவரும் பேரம் பேசி ரூ. 900 என முடிவுக்கு வந்து, நான் பணம் பெற்றுக் கொள்கிறேன். இது உண்மை வணிகம்.

ஊக வணிகம்

சரக்கு இல்லாமலே சூதாடுவது. கடலையை கண்ணில் பார்க்காமாலே சூதாடுவது. ‘அ’ என்பவர் கடலை இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 1500 விற்கும் என்பார். “ஆ” என்பவர் ரூ. 800 க்கு தான் விற்கும். என்பார். இருவரும் பந்தயம் கட்டிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் என்ன நிலையோ அதற்கு தகுந்தபடி பந்தயப்பணம் கைக்கு மாறும்.


இந்த ஊக வணிகத்தின் அளவு எவ்வளவு என பார்த்தால் ...

உலகம் முழுவதிலும் நடக்கும் நிதி பரிவர்த்தனையில் உண்மை வணிகம் 2 %. மீதி 98% ஊக வணிகம் தான்.

உலக நிதிச் சந்தையில், இன்றைய நிலையில் ஓராண்டு காலத்திற்குள் நடக்கும் அன்னிய செலாவணி கைமாற்றுகளின் அளவு 10,00,00,000 கோடி டாலர்கள்! இதில் உற்பத்தியோடு தொடர்புடையது 2% மட்டுமே. மொத்த உலகத்தின் உள்நாட்டு உற்பத்தி அளவு இதில் 4% மட்டுமே! (Red Star – Oct 2006)

ஆச்சரியமாய் இருக்கிறதா!

ஊகவணிகத்தில் பந்தய ஒப்பந்த வகைகள் (deraivatives) இருக்கின்றன. நிதி மூலதன வங்கிகள் இந்த பந்தய வகையறாக்களில் விளையாடி கொள்ளையடித்தது தான் இவ்வளவு பெரிய நெருக்கடி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவைகள் கிடையாது. இதன் தன்மை, வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அதைப் பற்றி சில தகவல்கள்.

பந்தய ஒப்பந்தங்களைத் தான் “நிதி உலகின் பேரழிவு ஆயுதங்கள்” என்கிறார்கள் இதன் பாதிப்பை ஆழமாய் உணர்ந்த பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும். அதில் ஒருவர் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட்.

பேரழிவு ஆயுதங்கள் மட்டுமில்லை. இவைகள் “கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்” என்கிறார் குருமூர்த்தி.

பழைய நினைவுகளில் கிளறிப் பார்த்தால்...


பந்தய ஒப்பந்த வகையறாக்களில் கொடிகட்டிப் பறந்து, பிறகு அவைகளினாலேயே என்ரான் குழுமம் நொறுங்கி விழுந்து திவாலானது. இந்த நிறுவனத்திற்குத் தான், மின் உற்பத்தியிலேயே ஈடுபடாமல், மகாராஷ்டிரா அரசு மாதம் 85 கோடி கட்டி, அதன் மின்சார வாரியம் திவாலானது. பிறகு, என்ரான் திவாலானதால், மகாராஷ்டிரா அரசு தப்பித்தது.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற் இரு மேதைகளால் நடத்தப்பெற்ற நீண்டகால முதலீட்டு நிர்வாகம் (LTCM) என்ற நிறுவனம் 1998ல் நொறுங்கியது இதற்கு இன்னுமொரு உதாரணம். இதன் கணக்குப் புத்தகங்களில் காணப்பட்ட பந்தய ஒப்பந்தங்களின் பண மதிப்பு 1,40,000 கோடி டாலர்களாகும்.

3 பின்னூட்டங்கள்:

Balan said...

This is really hard and fantastic work.Please continue this.
These articles are very much usefull to understand the puzzle and magic behind the economic crisis.

All the best...

Balan said...

This is really hard and fantastic work.Please continue this.
These articles are very much usefull to understand the puzzle and magic behind the economic crisis.

All the best...

Nalliah said...

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

- நல்லையா தயாபரன்