> குருத்து: லெனினிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

January 24, 2009

லெனினிடமிருந்து கற்றுக் கொள்வோம்!லெனின் நினைவு நாள் : 21, ஜனவரி 1924

வாக்காளர்களாகிய பொதுமக்கள், தங்கள் பிரதிநிதிகள் அவர்களுடைய வேலைகளை செய்து முடிக்கும் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும் என கோரவெண்டும்.

அவர்கள் லெனினைப் போல

அரசியல் ஊழியர்களாகப் பணியாற்ற வேண்டும்
தெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்

போராட்டத்தில் பயமின்றியும்,
மக்களின் பகைவர்களிடம் ஈவிரக்கமின்றியும்
இருக்க வேண்டும்.

லெனினைப் போல

நிலைமை சிக்கலாகும் பொழுது,
கிஞ்சித்தும் பீதியின்றியும்,
பீதியின் சாயலின்றியும் இருக்க வேண்டும்.

பரிபூரணமான விவரமான கண்ணோட்டமும்,
சாதகமானவற்றையும்
பாதகமானவற்றையும்
விரிவான முறையில் சீர்தூக்கி பார்க்கும் திறமையும்,

தேவையாயிருக்கும் அளவுக்கு
சிக்கலான பிரச்சனைகளைப் பற்றி
முடிவுசெய்வதில் நுண்ணறிவும்
தீர்க்கமாக ஆலோசனை செய்யும் சக்தியும்
பெற்றிருக்க வேண்டும்

லெனினைப் போல

ஒழுக்கமும், நேர்மையும்
பெற்றிருக்க வேண்டும்

மக்களை நேசிக்க வேண்டும்-

ஸ்டாலின் - உரையிலிருந்து

0 பின்னூட்டங்கள்: