> குருத்து: தேசம் கடக்கும் தரகு முதலாளிகளும், தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!

December 28, 2010

தேசம் கடக்கும் தரகு முதலாளிகளும், தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


இன்று இந்து நாளிதழில்..முதல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 17368 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில், கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள். தொடர்ச்சியாக கேள்விபடுவதால்..இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? மரத்துப் போய்விட்டோம் நாம்.

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள்.

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.

39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

தரகு முதலாளிகள் பற்றிய இந்த செய்தி எல்லாம், பழைய செய்திகள். புதிய செய்திகள். 2ஜி அலைக்கற்றை விவகாரம் புதியது. ராசா வருமான இழப்பு ஏற்படுத்தி விட்டார் என ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பேசுகின்றன. இதில் பல கோடிகளை சுருட்டி ஏப்பம் விட்டது தரகு முதலாளிகள் தான். டாடா, அம்பானி எல்லாம் களவாணிகள் என ஊடகங்கள் பேச மறுக்கின்றன. ஊடககாரர்களே தரகர்களாக தானே செயல்படுகிறார்கள்.

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் தரகு முதலாளிகளை 15 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளில் கொழிக்க வைத்திருக்கிறது. மறுபுறம் விவசாயிகள் தற்கொலையில் செத்துமடிகின்றனர். இந்த மக்கள் விரோத கொள்கைகளை நாம் முறியடிக்காமல், இவர்களை வீழ்த்த முடியாது. நம் விவசாயிகளையும் காப்பாற்றமுடியாது.

தொடர்புடைய சுட்டிகள் :
ஸ்பெக்ட்ரம் ஊழல் - மறுகாலனியாக்கத்தின் பம்பர் பரிசு! - வினவு
17,368 farm suicides in 2009 - சாய்நாத் - இந்து நாளிதழ் - 28/12/2010

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express

One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

4 பின்னூட்டங்கள்:

வலையுகம் said...

ஏ தற்கொலை பன்னி சாகுறங்க
இந்த பழக்கம் நம்மை எப்படி தொத்திக் கொண்டது இதற்கு போராடி சாகலாம்
ஈராக் மக்கள் மாதிரி

காசி ஆனந்தன் நறுக்குகள் தான்
நினைவுக்கு வருகிறது

பூனை கழுத்தில் மணி கட்டுவது யார்? ஏன்? ஒடி ஒளியவா?
நூறு எலிகளாய் பூனையின் கழுத்தை கடித்து குதறுவோம்

ஜோதிஜி said...

உருவாக்கிய தாக்கம் நன்றி.

மாற்று விடயங்களைப் பற்றி எழுதியிருக்கலாமே? ஏன் இந்த அரசாங்கம் விவசாயத்தில் அக்கறை காட்டாமல் இருக்கிறது?

குருத்து said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஹைதர் அலி அவர்களுக்கு நன்றி. இந்திய வரலாற்றில் தெலுங்கானா போராட்டம் என்பது விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய வீரம் செறிந்த போராட்டம். விவசாயிகளிடம் இந்த வீர வரலாற்றை சாகின்ற விவசாயிகளிடம் யார் போய் சொல்வது? யார் ஒருங்கிணைப்பது? ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் தான் சாத்தியம்.

குருத்து said...

கருத்துக்களை பகிர்ந்த ஜோதிஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரி! சில சமயங்களில் பல விஷய்ங்களையும் தேடி எழுத நினைத்து, எழுதாமலே போய்விடுகிறேன். அதனால், சில விஷயங்களை மட்டும் எழுதி பகிர்ந்துவிடுகிறேன்.