> குருத்து: நண்பன் - ஒரு காட்சி பற்றிய விமர்சனம்!

January 21, 2012

நண்பன் - ஒரு காட்சி பற்றிய விமர்சனம்!


நண்பன் படம் பற்றி பலரும் விமர்சனம் எழுதி வருகிறார்கள். பல விமர்சனங்கள் மேலோட்டமாக இருக்கின்றன. படத்தில் விவாதிக்க கூடிய கருத்துக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது விரிவாக எழுதினால் ஒரு புரிதலுக்கு வரலாம். அந்த படத்தில் ஒரு காட்சியை குறித்து பேசலாம் என இந்த பதிவு.

படத்தில் ஜீவாவின் குடும்பத்தை சில நிமிடங்கள் காண்பிக்கிறார்கள். படுத்த படுக்கையாகி கிடக்கும் அப்பா; புலம்பி தீர்க்கும் அம்மா; இருபத்தேழு வயதாகியும் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அக்கா. ஜீவாவின் அம்மா சுத்தம் இல்லாமல் சப்பாத்தி செய்து கொடுக்கிறார்கள். ஜீவாவின் இரு நண்பர்களான விஜய்க்கும், ஸ்ரீகாந்துக்கும் அசுத்தம் கண்டு குமுட்டல் எடுக்கிறது. வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்து, 80களில் உள்ள ஏழைக்குடும்பம் போல உன் குடும்பம் என ஜீவாவை நக்கலடிக்கிறார்கள். இந்த காட்சிகள் முழுவதும் கருப்பு-வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த காட்சியில் அரங்கிலும் சிரிப்பலை எழுகிறது.

இந்தக் காட்சி கோடிக்கணக்கான ஏழை உழைப்பாளி குடும்பங்களை இழிவுப்படுத்துகிறது. மேட்டுக்குடி திமிரை வெளிப்படுத்துகிறது. 3 இடியட்ஸில் பார்த்த பொழுதே கோபம் வந்தது. அதே காட்சியை தமிழிலும் கொஞ்சம் கூட மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆக அந்த கருத்தை இவர்களும் மறுப்பின்றி ஏற்கிறார்கள்.

காலம் காலமாக வறுமையும், வாழ்க்கை சிக்கலும் உழைப்பாளிகளுக்கு விதிக்கப்பட்டதா என்ன? வறுமையை விரும்பி ஏற்று கொண்டிருக்கிறார்களா என்ன? நடுத்தர வர்க்கத்துக்கும், மற்ற வர்க்கங்களுக்குமான சிக்கல்கள் மட்டும் 80களில் இருந்தது இப்பொழுது இல்லையா என்ன?

27 வயதான அக்கா திருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பது போல காண்பிப்பது! இதுவும் அபத்தம். ஏழைக்குடும்பங்களில் வயது வந்த யாரும் வீட்டில் அடைப்பட்டு கிடக்க வாழ்க்கை நிலைமைகள் அனுமதிப்பதில்லை. ஏதாவது ஏற்றுமதி நிறுவனத்திலோ அல்லது ஜவுளிக்கடைகளிலோ இயல்பாக வேலைக்கு சென்றுகொண்டுதான் இருப்பார்கள்.

இன்னுமொரு கற்பனை . வரதட்சணையாக 50 பவுன் கேட்கிறார்கள். உடைமை வைத்திருக்கும் மற்ற வர்க்கங்களுக்கு தான் இந்த பிரச்சனை எல்லாம். ஏழைகள் வீட்டில் இருந்தால் தானே கேட்பதற்கு! இருந்தால் தானே கொடுப்பதற்கு! அல்லது நம்பி யாராவது கடன் கொடுத்தால் தானே சீர் செய்வதற்கு! எதற்கும் வழியில்லை. தோடு, மூக்கத்தி போடு! 3 பவுன் நகை போடு! என்பதாக தான் வரதட்சணையின் அளவு இருக்கும். மண்டபத்தில் கூட அல்ல! கோயிலில் எளிமையாக திருமணத்தை முடித்துவிடுவார்கள்.

அடுத்து சுத்தம் சம்பந்தப்பட்டது. ஏழைகள் பெரும்பாலும் உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக தான் இருக்கிறார்கள். களத்து மேடுகளில் வேலை செய்யும் விவசாயியோ, கொத்தனாரோ, பெயிண்டரோ, ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளியோ, பெரும்பாலும் காலை, மாலை என இரண்டு நேரம் குளிப்பார்கள். குளிக்காவிட்டால் அவர்கள் நிம்மதியாய் தூங்கமுடியாது.

பெரும்பாலும் உடல் உழைப்பில் ஈடுபடுவதால், உடல் நன்றாக இருந்தால் தான் வேலைக்கு செல்லமுடியும். ஒருநாள் படுத்தால் கூட வாழ்க்கை தேவைகள் கழுத்தை பிடிக்கும். அப்படியே நோய்வாய்ப்பட்டால் மருத்துவ செலவுக்கு செய்ய பணம் எங்கே இருக்கிறது? ஆகையால், சுத்தமாக இருப்பது அவர்களுடைய அக விருப்பம் சார்ந்தது அல்ல! வாழ்க்கை வாழ முன்நிபந்தனையாகிறது.

இதற்கு வரலாற்றிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு சொன்னால் விளங்கும். அதுவும் காந்தியை வைத்து சொன்னால் நன்றாக புரியும்.

குஜராத்தில் பிளேக் நோய் பரவி, பல மனித உயிர்களை பலிவாங்கி கொண்டிருந்த காலம். குப்பையும், கூளமும் அதிகமாகி, சுத்தமில்லாதது தான் காரணம் என காந்தி அறிகிறார். களத்தில் இறங்கி, பல வீடுகளுக்கும் நேரடியாக ரெய்டு போகலாம் என முடிவெடுக்கிறார். 3 இடியட்ஸ் இயக்குநர் போலவே காந்தியும் சிந்திக்கிறார். எப்படி? ஏழைகள் தான் சுத்தமில்லாதவர்களாக இருப்பார்கள் என! அதனால் முதலில் சேரிப்பகுதியில் வீடு வீடாக போகிறார். வீடு, கழிப்பறை என எல்லாம் படுசுத்தமாக இருக்கின்றன. அடுத்து, மற்ற வர்க்கங்கள் வீட்டுக்கு போகிறார். வீடு, கழிவறை எல்லாம் அசுத்தமாக இருக்கிறது. காந்தி நொந்து போகிறார்.

****

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Good point. நான் இன்னும் நன்பன் படம் பார்க்கவில்லை. ஆனால், 3 இடியட்ஸ் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்னது மிக்க சரி. இன்றைய படிப்பு முறைகளை விமரிசித்துகொண்டே வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் இப்படி காட்சியை அமைத்து மக்கள் மனதில் விஷத்தை ஏற்றிவிடுகிறார்கள்.

- பாலாஜி, பெங்களூர்

புலவன் புலிகேசி said...

Read this... http://www.pulavanpulikesi.blogspot.com/2012/01/blog-post_17.html

Anand K Lingam said...

thalaiva........ movie is an entertainment.....

enjoy pannunga

thats it.....

something is made for joke only to give smile to others......

actually i think, director also didnt think in your point of view...

he may think the poor peoples life, how it goes like that....

but in your view is bad.

why you see this in this bad view...

just enjoy thalaiva.......

dont confuse peoples with your new creativity...

90 rs kudutheengala, 3 hours enjoy pannuneengala....

thats it......

padam pakkumpothu naamalum college life la epdilam erunthom,

or mis psnnitom........ once more college life pona apdi erukkum nu feel aguthulla

thats it....

director point la padam paththa story purium......

yarume theatre la ungala mathiri thappa feel pannirukka matanga.....

and one important think..,

cinema poliana world.....

nija vaalkaila nadakkathatha nadantha apdi erukkumgura imagination thaan cinema

so cinema la logic thedatheenga....

yaruvena apdi vena karpana pannalam

so please, cinemala logic thedatheenga

enjoy the scenes ......

thats all....... thank you

if i say anything wrong, if my words hurts your heart i am sorry...

குருத்து said...

ஆனந்த் அவர்களுக்கு,

திரைப்படத்தை மிக குறைத்து மதிப்பிடுகிறீர்கள். திரைப்படம் பொது உளவியலை கட்டமைப்பைதில் நிறைய பங்கு வகிக்கிறது.

இலக்கியங்கள் வாழ்க்கையின் எதார்த்தங்களை பேசவேண்டும். கற்றுக்கொடுக்கவேண்டும். விவாதிக்க வைக்க வேண்டும்.

தங்கள் வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி.

குருத்து said...

பாலாஜி அவர்களுக்கும், புலிகேசி அவர்களுக்கும் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

வலிப்போக்கன் said...

காந்தியும்,நண்பன் டைரடக்கரும் ஒன்னா? மலையும் மடுவும் ஒன்னாகுமா?

Jegadeeswaran Natarajan said...

அப்படிப் பார்த்தால் அவ்வை சண்முகியில் கூறப்படாத ஜாதியா,.. ஜெமியை அய்யராக, மணிவண்ணனை முதலியாராக,..

அத்தனை ஏன் தசவதாரத்தில் பெரியாருக்கே நாடர் என சாதி சுட்டப்பட்டதே. இவற்றைவிடவா நண்பன் பாதித்துவிடப்போகிறது. எத்தனை ஏழைகளின் வீடுகளில் சுகாதாரம் பேனப்படுகிறது . கூவத்தின் கரையில் வசிப்பவர்கள் சுகாதாரமாகவும், சுகமாகவும் இருக்கின்றார்கள் என்று காட்டுவதானே குற்றம்.