“அலுவலக நேரம் முடிந்த பிறகு வேலைக்கான அழைப்பு/மின்னஞ்சலுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நிறுவனம் திணிக்கக் கூடாது” — நேற்று மகாராஷ்டிரா எம்.பி. சுப்ரியா சூலே “Right to Disconnect Bill” என்று ஒரு தனியார் மசோதாவை லோக்சபாவில் வைத்திருக்கிறார்.
****
1.
Work–Life Balance — என்றால்?
வாழ்க்கையை இரண்டு
தெளிவான பகுதிகளாகப் பிரித்து, வேலை மனதை முழுவதும் கொள்ளை கொள்ளாமல், வாழ்க்கை பின்னுக்கு தள்ளப்படாமல், அமைதியாகச் செல்லும் முறையான வாழ்க்கை.
“வேலை செய்யும்போது வேலை மட்டும்;
வீட்டில் இருக்கும்போது வாழ்க்கை மட்டும்.”
“அமைதி என்பது வேலை இல்லாத நிலை அல்ல; உள் சக்தி குழம்பாமல் இருக்கும் நிலை.” உளவியல்
அறிஞர் Dr. Carl Jung
2.
ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் மிகவும் அவசியம்?
வரி
தொழில்
என்பது
- சட்டம்
- கணக்கு
- நேர வரம்பு
- நிதானம்
- பொறுப்பு
இவை
அனைத்தும் கலந்த
ஒரு
கடுமையான துறை.
சமநிலை
குலைந்தாலே தொழில்திறனே குலைந்து விடும்.
(1)
பிழைகள் அதிகரிக்கும் — சட்டத் துறையின் எச்சரிக்கை
“களைப்பான மனம் எந்த தொழிலிலும் தரமான முடிவுகளை எடுக்காது.” - Peter Drucker
வரி
ஆலோசகருக்கு முடிவெடுக்கும் திறன்
குறைந்தால்,
அது
நேரடியாக தாக்கல், தணிக்கை, வாடிக்கையாளர் நம்பிக்கை— அனைத்தையும் பாதிக்கும்.
(2)
வாடிக்கையாளருடன் உரையாடல் மந்தமாகிறது.
“மனஅழுத்தம் இருக்கும் போது மனிதன் சொற்களை நிதானமாக பயன்படுத்த முடியாது.” - Cal Newport
வரி
துறையில் தெளிவான விளக்கம் மிக
முக்கியம். உள்ளத்தின் சமநிலை
இல்லாமல் இது
சாத்தியமே இல்லை.
(3) தொழிலின் மரியாதை குறையும்
“Balance இல்லாத நபர், தனது சிறந்த திறனை இழந்து கொள்கிறார் என்று கூட அவருக்கே தெரியாது.” - Harvard Business Review
வரி
தொழிலில் “தரமான
ஆலோசனை”
என்பதே
மரியாதை. மனநிலையின் சமநிலை
இல்லாமல் இது
நிலைக்காது.
(4)
உடல்நலம் நேரடியாகத் தாக்கப்படும்
“அளவுக்கு மீறிய பணிச்சுமை, உடலின் இரசாயன ஓட்டத்தையே மாற்றிவிடும்.” - Dr. Andrew Huberman
அதாவது:
தூக்கம், ரத்தஅழுத்தம் கவனம் இவை அனைத்தும் சிதையும். இவைகள் தவறினால் தொழிலும் நழுவ ஆரம்பிக்கும்.
3.
Work–Life Balance எப்படி வளர்த்துக்கொள்வது?
“திட்டம்” போல
இல்லாமல், நடைமுறையில் நிதானமாக கடைப்பிடிக்கும் முறை
1.
தின நேர எல்லை — “இவ்வளவு நேரத்திற்கு பிறகு வேலை இல்லை”
வரி
வேலை
முடிவில்லாத ஓட்டம்.
கவனமாக
நம்மை
காத்துக்கொள்ள வேண்டும்.
“எல்லை இல்லாத வேலை வெற்றியை தராது; வேலை எல்லையை மதிக்கும் மனிதனே நிலையான வெற்றியைத் தருவான்.” - Jim Collins
2.
காலை நேரத்தை மிக முக்கிய பணிகளுக்கே ஒதுக்குங்கள்
- காலை நேரத்தில் உடலும் மனமும் தெளிவாக இருக்கு. ஆகையால்
காலையிலேயே செய்துவிடுங்கள். மற்ற வேலைகளை மதியம் என தள்ளி வையுங்கள்.
“காலை மணிகளில் மனிதன் தனது மனம் மீது முழு கட்டுப்பாடு உடையவன்.” - Robin Sharma
3.
தினமும் 20 நிமிடம் — உடல் இயக்கம்
தினமும் 20 நிமிடத்தில் நடைப் பயிற்சி செய்யுங்கள். உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை கொண்டு வரும்.
“உடல் இயக்கத்தை மேம்படுத்தும் மனிதன், மன தெளிவையும் பாதுகாக்கிறான்.” - Dr. Daniel Goleman (Emotional Intelligence)
4.
10/20 நிமிடம்
அமைதி
மொபைல்
இல்லாமல், யாருடனும் பேசாமல். உள்ளே ஓடும் சத்தங்கள் அமைதியாகும்.
“குறுக்கீடு இல்லா சில நிமிடங்கள், நாள் முழுவதையும் மாற்றி அமைக்கும் சக்தி உடையது.” - Viktor Frankl
5.
வாரத்தில் ஒரு நாள் — ஓய்வு நாள்
அது
தொழிலிலிருந்து ஓடுவதல்ல; நம்மை
நாமே
சீரமைத்துக் கொள்ளும் நாள்.
“சிறு இடைவெளிகள் வேகத்தை குறைப்பதில்லை; அது பயணத்தை நீட்டிக்கும்.” - James Clear
இறுதியாக
Work–Life Balance என்பது:
- உடலின்
தேவைக்கு மரியாதை
- மனத்தின்
தெளிவுக்கு இடம்
- தொழில்
தரத்தைச் சீராக வைத்திருக்கும் தளம்
- குடும்பத்திற்கும்
நமக்கும் கொடுக்கப்படும் சம வாய்ப்பு
Peter Drucker சொன்னது
போல…
”எந்த தொழிலும் தெளிவான மனத்தால் தான் வளர்கிறது.”
வரி
தொழில்
அதில்
முதன்மையான ஒன்று.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
எல்.ஐ.சி.
முகவர்
📞 95512 91721

0 பின்னூட்டங்கள்:
Post a Comment