கதை. நாயகன் வானவியல் (astrophysicist) ஆய்வாளர். பால்வெளியில் இருந்து பூமியை நோக்கி ஒரு வால் நட்சத்திரம் வந்துகொண்டிருக்கிறது. அது பூமிக்கு வந்த பிறகு, 9 நாட்களுக்கு மின்சாரமோ, இணையமோ, மின்வாகனங்களோ எதுவுமே இயங்க போவதில்லை என மக்களுக்கு விளக்குகிறார்.
அந்த ஒன்பது நாளும் இமயமலை அருகே இருக்கும் தன் வீட்டில் தங்கி, ஆய்வு செய்ய சொல்லி, அவருடைய சீனியர் ஒரு வேலையை கொடுக்கிறார். நாயகன் காதலித்து மணந்த துணைவியார் முதல் பிரசவத்தில் இறந்துவிடுகிறார். அந்த இழப்பு அவருக்கு தாங்கமுடியாததாக இருக்கிறது. தனது 10 வயது மகனுடன், ஒரு ஆய்வுக் குழுவையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.
அங்கு எதைச்சையாய் வந்து சேர்கிற இவா என்கிற பெண்ணால், நிறைய திகில் சம்பவங்கள் நடக்கின்றன. மகனை கொல்ல முயற்சி நடக்கிறது. உதவியாளர் ஒருவர் ஐசியூவில் சேர்க்கப்படுகிறார்.
எல்லாவற்றையும் எதிர்கொண்டு, ஊர் வந்து பத்திரமாக சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை!
***
என்னடா விஞ்ஞான படம் போல பில்டப்பா துவங்கி, எங்கெங்கோ போகிறது என யோசித்தால், முடிவில் அதற்கான விளக்கம் கொடுக்கும் பொழுது, அப்பாடா என்றிருக்கிறது!
நாயகன் பிரித்திவிராஜ், துணைவியாக வரும் மம்தா, மகன் ஆதாம், இவாவாக வரும் (மாலை நேரத்து மயக்கத்தில் வந்த) வாமிகா படத்தில் முக்கிய பாத்திரங்கள். நன்றாக செய்திருக்கிறார்கள். சீனியர் ஆராய்ச்சியாளராக வரும் பிரகாஷ்ராஜ் படத்தை துவங்கி வைத்து, முடித்தும் வைக்கிறார். ஆளை இப்பொழுது நிறைய பார்க்கமுடியவில்லை. சுஷாந்த் சிங் மரண விவகாரம் குறித்து பலரும் பேசும் பொழுது, "தானும் கடுமையாக தனிமைப்படுத்தப்பட்டதாக" வருத்தப்பட்டிருந்தார். ஒரு கலைஞன் சமூக பொறுப்புடனும் இருக்கவேண்டும் என்பதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் நல்ல எடுத்துக்காட்டு. அவர் மீண்டும் பழையபடி படங்களில் வரவேண்டும்.
படம் ஒரு சைக்காலஜி திரில்லராக பார்க்கும்படி வந்திருக்கிறது. பாருங்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment