பிடித்த அம்சங்கள்
*சமூகத்தில் சட்டத்தை மீறுபவர்கள் யார், யார் என ஆராய்ந்தால், அதில் முதலில் இருப்பவர்கள் போலீசு என தாராளமாய் சொல்லலாம். ஆனால், சமூகத்தில் சட்டத்தை காப்பாத்துகிறவர்கள் என பெயரில் வலம் வருகிறார்கள்.
போலீசு தனக்கு உள்ள கெட்ட பெயரை மாற்ற, சமூகம் மிகவும் கோபப்படுகிற சில நிகழ்வுகளில், குறைந்தபட்சமாக சிக்கியவர்களை கை, கால்களை ஸ்டேசனில் வைத்து உடைக்கிறார்கள். அதிகப்பட்சமாக போலி என்கவுன்டரில் போட்டுத்தள்ளி, திரைக்கதை எழுதி முடித்துவிடுகிறார்கள்.
படத்தில் அப்படி போலீசு திரைக்கதை எழுதி, முடித்துவிடும் உள்ள ஆபத்தை இந்த படம் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறது.
(கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்? போலீசுகாரர்கள் யாரும் வழுக்கிவிழுந்தார்களா? பட்டியல் கொடு என மிகவும் தாமதமாக மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது.)
* பெண் பிள்ளைகளுக்கு இங்கு எல்லாவித ஆலோசனைகளையும் அள்ளித்தெளிக்கிறார்கள். வீட்டில் வளர்கிற பசங்களுக்கும் சொல்லி வளருங்கள்.
* கோயிலுக்கு கொடுப்பதை போல கல்விக்கும் கொடுங்கள் என ஜோதிகா சொன்னதை வைத்துக்கொண்டு, படம் குப்பை என சங்கிகள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். படம் அசீபாவிற்கு நேர்ந்த அவலத்தைப் பற்றியும் பேசுவதால், சங்கிகளுக்கு எரிகிறது. நன்றாக எரியட்டும்.
* படத்தின் வடிவத்தில் பலரும் குறைகளை சொல்கிறார்கள். "மூத்த" இயக்குநர்களில் பலர் இன்னும் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கும் பொழுது, புதிய இயக்குநர் சமூகத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை குறித்து எடுத்து இருக்கிறார். இனி வரும் காலத்தில் இன்னும் சிறந்த படங்களை கொடுப்பார். வாழ்த்துவோம்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment