வாசிப்பை நேசிப்போம் குழுவில் கொடுத்த பரிசு குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு போட்டிருந்தேன். அதைப் படிச்சுட்டு, ஊரிலிருந்து தங்கச்சி பசங்க இருவர் இருபதினாயிரம் சந்தாதாரர்களை பெற்று யூடியூப் சானலை நடத்தி வருகிறார்கள். மாமா நிறைய படிக்கிறார்னு தெரிஞ்சுகிட்டு "எனக்கு கான்செப்ட் சொல்லுங்க! நாங்க அதை வீடியோ பண்றோம்" என ஆர்வமாய் கேட்கிறார்கள்.
நாம ஏதோ நமக்கு பிடிச்ச புத்தகங்களை, பிடிச்ச நேரத்துல படிச்சு, நேரம் கிடைக்கும் பொழுது எழுதிகிட்டு இருக்கோம். இப்ப இந்த மருமக பசங்க இப்படி கேட்கிறாங்க! அவங்களோடு பேசி, விவாதிச்சு கன்டென்ட் கொடுத்தே ஆகணும்! இல்லைன்னா, "மாமா ஒரு உடான்ஸ் பார்ட்டி"ன்னு ஊரில சொந்தங்களுக்கு மத்தியில் சொல்லிருவாங்கன்னு கெதக்குன்னு இருக்கு!
பொதுவுல சொல்றதில்ல இப்படி எல்லாம் பிரச்சனை இருக்குன்னு தெரியாம போச்சே!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment