1. வெளியில் சுற்றவே கூடாது. எப்போது பார்த்தாலும் ஊரைச் சுற்றுகிறாய் என திட்டுவிழும். ஆனால் அவர்கள் எங்காவது செல்ல வேண்டும் என்றால் மேப் கூட பார்க்காமல் சரியான பாதையில், குறைவான நேரத்தில், டிராபிக் இல்லாத ரோட்டில் அழைத்துச் சென்று விட வேண்டும். இவையனைத்தையும் ஊரைச் சுற்றாமல் வீட்டுக்குள் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.
3. வேலை, வேலை என அலையக் கூடாது. ஆனால் உடன் வேலை பார்க்கும் கொலீக்கை விட பெஸ்ட் பெர்பார்மன்ஸ் செய்பவராக இருக்க வேண்டும்.
4. பணத்தை ஒரு பொருட்டாக கருதக் கூடாது. ஆனால் வங்கியில் பெரிய பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
5. கலகலவென சிரித்துப் பேசுபவராக இருக்கவேண்டும். ஆனால் தன்னைத் தவிர மற்றவர்களிடம் உம்மென இருக்க வேண்டும்.
6. மொபைல் போன் அதிக நேரம் உபயோகிக்கக் கூடாது. ஆனால் அதன் டெக்னாலஜி எல்லாம் அத்துபடியாக இருக்க வேண்டும். அவர்கள் போனில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சரி செய்து தர வேண்டும்.
தொடரும்…..
- சென் பாலன்,
மருத்துவர்
டிஸ்கி : இரு பாலருக்கும் பொதுவானது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment