நாயகன், நாயகி கல்லூரி படிக்கும் பொழுதே இருவரும் ”ஆழமாக காதலிக்க”, நாயகி கர்ப்பமாகிறாள். இது பொருத்தமில்லாத நேரம் என சொல்லி கலைக்க சொல்கிறான். அவள் பிடிவாதமாக மறுக்கிறாள். இரு வீட்டாரும் கைவிட்டுவிட… வேறு வழியில்லாமல் பல்வேறு சிரமங்களுடன் தனியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.
பிறகு இணைந்தார்களா என்பதை உணர்வுப்பூர்வமாகவும், சுவாரசியமாகவும் முடித்திருக்கிறார்கள்.
***
நமக்கு நன்றாக பழகிய கதை தான். அதை அழுது வடியாமல்… கிரிஞ்சாக இல்லாமல் நிதானமாக கொடுத்தது தான் படத்தின் வெற்றி.
இருவரும் கல்லூரி மாணவர்களாக இருந்தாலும்.. விட்டேத்தியாக காண்பிக்கவில்லை. அது பாசிட்டிவ்வானது. அவர்களுக்குள் வரும் சண்டைகளும் இயல்பானவை தான். குடும்பங்கள் கொஞ்சம் ஆதரவாக இருந்திருந்தால்… பிரிவைத் தவிர்த்திருப்பார்கள். சில வேலைகளில் குடும்பமே பிரிவிற்கும் தூண்டும்.
எழுத்தாளர் ஆதவன்."திருமணத்திற்கு பிறகு கணவன் தன் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன் துணைவியாரையும், துணைவியார் தன் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன் கணவனை மாற்ற முயல்வார். ஓராண்டு/இரண்டு ஆண்டிற்கு பிறகு… இவர் மாறமாட்டார். பொறுத்துக்கொண்டு போவது புத்திசாலித்தனம் என இருவருமே புரிந்துகொள்வார்கள் " என்பார் இந்த காலம் வரை தாக்குப்பிடிக்கவேண்டும். பிரிந்துவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது.
படம் வேக வேகமாக நகராமல், ஒரே சத்தமாக இல்லாமல்… நிதானமாக சென்றது நன்றாக இருந்தது. நாயகன் கவின், நாயகி அபர்ணா, அந்த குட்டிப்பையன், சில நிமிடங்கள் வந்து செல்லும் பாத்திரங்கள் கூட நினைவில் நின்றது அருமை.
படத்தின் இறுதி காட்சியைப் பார்த்த பொழுது… மிஷ்கினின் நந்தாலாலா படத்தில் எழுத்துப் போடும் பொழுது… குழாங்கற்களுக்கு மேலே தெளிந்த நீர் ஓடும். அது அத்தனை அருமையான காட்சி. அந்த காட்சி நினைவுக்கு வந்தது.
இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இயக்குநர் கணேஷ் கே பாபுக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து இது போல நல்ல படங்களை தரவேண்டும்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment