> குருத்து: கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம்!

April 18, 2013

கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம்!

இயக்கம் : ஜான் பில்ஜெர்

போர்ச்சுக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும், இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம்.

ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தைமூரை பிரிட்டன் மற்றும் அமெரிக்க உதவியோடு 'கம்யூனிஸ்டுகள்' என்று முத்திரைக் குத்தி  எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்கள்,  வீடியோக்கள் மூலம் விளக்கிப் பதறவைக்கிறார்கள். 

1970 முதல் 1997 வரை பிரிட்டனின் ஆயுதங்கள் மூலம் இந்தோனோசியா ராணுவம் இரண்டு லட்சம் மக்களை கொன்றதும், அது தொரபாக உலக நாடுகள் சாதித்த மெளனமும் தைமூரியர்க்ள் ஆயுதப் பாதைக்கு திரும்பியதும் மனம் கனக்கும் ரண வரலாறு.

பத்திரிக்கைச் செய்திகள், அரசு ஆவணங்கள், புகைப்பட வீடியோ தொகுப்பு, மக்களின் வாழ்க்கை முறை, கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள், போராளிகளின் பேட்டிகள் என ஓர் அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றைக் கடின உழைப்போடு தொகுத்திருக்கிறார் போர்முனை செய்தியாளார் ஜான் பில்ஜெர்.  அவசியம் காண வேண்டிய அபூர்வமான வரலாற்றுப் பதிவு!

நன்றி : ஆனந்தவிகடன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்

விலை ரூ. 100

நேரம் : 77 நிமிடங்கள்

பின்குறிப்பு : தமிழ் மொழிபெயர்ப்பு வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சில இடங்களில் மக்களின் பேச்சை அவர்களின் குரல் போல பேசுவதாக கம்மி குரலில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். 1994ல் வெளிவந்த படம். தமிழுக்கு கொண்டுவர இத்தனை ஆண்டுகள் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது.  இது மாதிரியான பல படங்கள் தமிழ்ச் சூழலில் மொழிப்பெயர்க்கப்படவேண்டும்.

வரலாறு நெடுக உலகம் முழுவதும் ஈழ இனப்படுகொலை போல நடந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது!

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

That was not Bangladesh. It was Indonesia.

Anonymous said...

Its not bangladesh but indonesia which tried to occupy.

Anonymous said...

its indonesia not bangaladesh.
this kind of blunders will reduce the trust of ur article.

குருத்து said...

நீங்கள் சுட்டிக்காட்டியது சரியானது தோழர். பங்களாதேஷின் ஆதிக்கம் இல்லை. இந்தோனோசியாவின் ஆதிக்கம் தான் சரி. தட்டச்சு செய்யும் பொழுது தவறு ஏற்பட்டுள்ளது. இனி கவனமாக இருக்கிறேன்