நாயகி சிறுமியாக தன் தந்தையுடன் பாதுகாப்பாக இருக்கிறார். குழுவின் விதிமுறையை மீறிவிட்டார் என ஒரு கொலைகார குழு வந்து, நாயகியின் அப்பாவை கொன்றுவிட்டு, நாயகியை தூக்கி செல்கிறார்கள். அந்த கொலை அவளை மிகவும் பாதிக்கிறது.
இன்னொரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பாலே நடனம், துப்பாக்கி,
சண்டை என கடுமையான பயிற்சி தருகிறார்கள். பாதுகாக்கும்
வேலையா? கொலையா? என தேர்ந்தெடுப்பதில், பாதுகாப்பது என முடிவெடுக்கிறாள்.
பெரிய மனிதர்களை கொலைகாரர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் பிரதான
வேலை. அந்த வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்பாவை கொன்ற குழு அடையாளத்தில் ஒருவன்
சிக்குகிறான். தன் குழுவிடம் விசாரிக்கும் பொழுது, ”அது மோசமான கொலைகார குழு. ஆகையால்
அதில் தலையிடாதே! உன் உயிருக்கும் உத்தரவாதமில்லை!” என எச்சரிக்கிறார்கள்.
மீறி அந்த கொலைகார கும்பலை தேடிச் செல்கிறாள். போகும் வழியெல்லாம்
ரணகளம் தான். இதில் மோசமான சூழ்நிலையில்; ஜான்விக்
(கெளரவ வேடத்தில்) வந்து தலையிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***
கதைக்காக எல்லாம் அவர்கள் பெரிதாக மெனக்கெடவில்லை. அது எதுக்கு தேவையில்லாமல் என்பதாக தான் அவர்களுடைய அணுகுமுறை இருக்கிறது.
ஜான்விக் தான் செத்துப்போயிட்டாரே! எப்படி என கேள்வி கேட்டால்,
மூன்றாம் பாகத்திற்கும், நான்காம் பாகத்திற்கும் இடையில் இந்த கதை நடக்கிறது என்கிறார்கள்.
பாதுகாப்பது அல்லது கொலை என்பதற்கு பயிற்சி ஓக்கே. அதில் என்ன
பாலே நடனம் எதற்கு வருகிறது. பயிற்சி தருகிறார்கள். எதில் சிறந்து விளங்குகிறார்களே
அதில் தேத்திவிடுகிறார்கள் போல!
Ballerina என்ற
பெயரில் 2023ல் ஒரு கொரியப் படம் வந்திருக்கிறது. அதில் தன் தோழியை கொன்றுவிட்டார்கள்
என அந்த படத்து நாயகி பழிவாங்குகிறாள் என கதை சொல்கிறார்கள்.
Ana de Armas தான் நாயகி. 37 வயது. ஆனால் 25 வயது போல சண்டைப்
போடுகிறார். கொஞ்சம் நெருக்கமாய் கேமரா போனால் மட்டும் வயது தெரிகிறது. (நம்மூர் ஷ்ரத்தா
கபூர் சாயலோடு இருக்கிறார்.) மற்றபடி சண்டை போடும் பொழுது, அடி வாங்கி, அடி கொடுத்து,
உயிர் பிழைக்கிறார்.
சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும். பாருங்கள். பிரைமில் தமிழிலும் கிடைக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment