நாயகி தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு, ஐரோப்பாவை வலம் வரவேண்டும் என தன் இரு தோழிகளுடன் பயணம் கிளம்புகிறாள். நாயகன் எதைச்சையாய் ஒரு ரயில் பயணத்தில், ஹெமிங்வேயின் புத்தகத்தை வைத்து பேச துவங்குகிறார்கள்.
அடுத்தடுத்த சந்திப்புகளும், உரையாடல்களும் நெருக்கத்தைத் தந்து, காதலிக்க துவங்குகிறார்கள். அவள் வாழ்வில் எல்லாமே திட்டமிட்டவை. ஒழுங்குடன் கூடியவை. அவனோ அந்த நிமிடத்தில் வாழவேண்டும். அப்படியே ஒரு பறவை போல பயணம் செய்து கொண்டே வாழவேண்டும் என நினைக்கிறவன்.
இருவரும் பயணம்
செய்வது ஓக்கே. இருவரும் இணைந்து வாழவேண்டும் என நினைக்கிற பொழுது… அவர்களுக்குள் விவாதம்
வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு நாவல் எழுதி, புகழ்பெற்று, அதையே படமாக்கலாம் என எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மிகவும் மேலோட்டமாக இருந்த. முடிவு இது தான் என நாம் கணிக்கிற ஒன்றை முடிவாக கொண்ட கதை. காட்சிகளில் கூட புதுமையோ, ட்விஸ்டோ ஏதுமில்லை.
பயணம் தொடர்பான படம் என்பதாலும், பிரைமில் தமிழில் இருந்ததாலும் பார்த்தேன். குறிப்பாக நாயகியின் இயல்பான நடிப்பு பிடித்திருந்தது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment