தயவுசெய்து
என்னை அவசரப்படுத்தாதீர்கள்
அதோ அந்த செர்ரி மரங்களை நோக்கி
நான் மெல்ல நகர்கிறேன்;
நான் சென்றடையவேண்டிய
இடம் ஒன்றுமில்லை,
செய்தே தீரவேண்டிய
வேலைகளும் கிடையாது
இந்த வேகமே எனக்கு உவப்பு.
நான் மெதுவாகப்
போகவே விரும்புகிறேன்;
இது எனக்கு
நான் கடந்து செல்லும்
பூக்கள் அனைத்தையும்,
புல்லின் இதழ்கள்
ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்கு,
வேண்டிய நேரத்தைத் தருகிறது.
நான் ஒரு நத்தை;
இது என் பாதை.
தயவு காட்டுங்கள்
என்னை அவசரப்படுத்தாதீர்கள்,
எனக்கு இந்நாள் முழுவதும்
இன்னும் மீதமிருக்கிறது.
- பார்பரா வான்ஸ்,
அமெரிக்கப் பெண் கவிஞர்
தமிழில் - க.மோகனரங்கன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment