> குருத்து: கொடைக்கானல் ரயில்வே ஸ்டேசன்!

April 23, 2020

கொடைக்கானல் ரயில்வே ஸ்டேசன்!


டப் பட காமெடி!

விஜய் தொலைக்காட்சியில் 'மனதில் நின்றவள்' என்ற பெயரில் தெலுங்கு டப் படம் ஓடிக்கொண்டிருந்தது.

காட்சிகளில் தெலுங்கு வரும் இடங்களில் எல்லாம் பொறுப்பாக தமிழில் மாற்றியிருந்தார்கள்.

ஒரு காட்சியில் நாயகி ரயிலில் இருந்து இறங்குகிறார். 'கொடைக்கானல் ரயில்வே ஸ்டேசன்' என்று 'தெளிவாக' எழுதியிருந்தார்கள்.

கொடைக்கானலில் எங்கே ரயில்வே ஸ்டேசன் இருக்கிறது?

திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடையில் 'கொடை ரோடு' என்ற ஸ்டேசன் தான் இருக்கிறது. அங்கு இறங்கி காரிலோ, பேருந்திலோ தான் கொடைக்கானல் செல்லமுடியும்.

 டப் படத்தில் உற்று கவனித்தால் இப்படி நிறைய நகைச்சுவை இருக்கும்! :)

0 பின்னூட்டங்கள்: